மனோகரியின் மானத்தை காக்க எழில் எடுத்த முடிவு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நாடகம் ஆடுகிறாள். வீட்டில் கனகவல்லி, எழில் என அனைவரும் அவளை தேடிக்கொண்டு இருக்க, செல்விக்கு ரகசியமாக போன் செய்யும் மனோகரி, நான் சொல்ற மாதிரி செய்யணும் என ரகசியமாக ஏதோ சொல்ல உடனே செல்வி போனை வைத்துவிட்டு, மனோகரி சொல்வது போல செய்கிறாள்.
மனோகரி இருக்கும் இடம் தெரிந்து, எழில் ஹோட்டலுக்கு கிளம்ப, செல்வி மனோகரிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் ஐயாவும் நம்பிட்டாரு என சொல்கிறாள். மேலும் ஹோட்டலுக்கு கிளம்பி வரும் விஷயத்தையும் சொல்கிறாள். அதே நேரத்தில் செல்வி பேசியதை சுடர் கேட்டு விடுகிறாள். அடுத்ததாக எழில் ஹோட்டலுக்கு வர ஜன்னல் வழியாக இதை பார்த்த மனோகரி போலீசுக்கு போன் போட்டு ஹோட்டலில் இல்லீகலாக சில விஷயங்கள் நடப்பதாக பொய் சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், அறையில் மனோகரி அழுது நாடகம் போட அவளை, எழில் கட்டி பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டிருக்க. அந்த நேரம் பார்த்து போலீசார் வந்து, இவர்களை தவறான கேஸில் கைது செய்து அழைத்து செல்கின்றனர். இது அனைத்து ஊடகத்திற்கும் தெரிந்து, மீடியாக்களும் மொத்தமாக அங்கு கூடி கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இதையடுத்து, மீடியாக்கள் முன் நானும் எழிலும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று சொல்லி அனைவரின் வாயை அடைத்துவிடுகின்றனர்.
டிராமா போட்ட மனோகரி: இதையடுத்து, இருவரும் வீட்டுக்கு வர, கனகவள்ளி என்னாச்சு என்று கேட்க மனோகரி எல்லாம் பிரச்சனையும் என்னால் தான், என்னை மன்னிச்சிருங்க எழில் என்று கண்ணீர் விட்டு மீண்டும் நாடகம் போடுகிறாள். எல்லார் முன்னாடியும் உங்கமானம் போக்கூடாது என்று தான் கல்யாணம் பண்ணிக்க போகிறோம் என்று சொன்னேன். இனிமேலும் நான் இங்கே இருந்தால் நன்றாக இருக்காது, இந்த வீட்டை விட்டு போவதுதான் சரி என்கிறாள்.
வாக்கு கொடுத்த எழில்: இதையடுத்து, எழில் மனோகரி நீ எங்கேயும் போக வேண்டாம், நீ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் உன் வாழ்க்கை எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். ஆனால், எப்போ எனக்காக, என் குடும்பத்திற்காக இப்படி ஒரு பழிய ஏத்துக்கிட்டயோ, என்னால உன் வாழ்க்கை கெட்டுப்போகக்கூடாது. நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்கு கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது குறிக்கிட்ட கனகவள்ளி, எழில் நீ என்னப்பா சொல்ற என்று கேள்வி கேட்க ஆமாம் அம்மா, நான் யோசித்து தான் சொல்றேன் என்று பதில் சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











