ஆட்டம் போட்ட மனோகரிக்கு ஆப்பு வைத்த சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில்,இந்துவின் ஆவி சுடர் மற்றும் தீபாவை சந்தித்து எழில் சார், ஓட்டலில் கைதாக அந்த மனோகரி தான் காரணமாக இருப்பாங்கன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு என்று சொல்கிறாள். மறுபக்கம் கனகவள்ளி, மனோகரியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழில் எடுத்த முடிவால் வருத்தத்தில் இருக்கிறாள்.

அதே போல குழந்தைகளுக்கும் எழில், மனோகரியை திருமணம் செய்து கொள்வது பிடிக்காததால், அனைவரும் சோகத்துடன் அமர்ந்து இருக்கின்றனர். இதையடுத்து, அங்கு வரும் சுடரிடம், அப்பா எடுத்த முடிவு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல, சுடர் இந்த கல்யாணம் நடக்காது என்று சவால் விடுகிறாள். ராமைய்யாவிற்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், சுடரிடம் கல்யாணத்தை நிறுத்த எந்த உதவியா இருந்தாலும் என்கிட்ட கேளு நான் செய்யுறேன் என்று சொல்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai television

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கழுத்தில் இருந்த தாலி எழில் கண்ணில் படாதபடி மறைத்து விடுகிறாள் சுடர். இதையடுத்து, எழிலுக்கும் மனோகரிக்கும் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர்கள் வீட்டிற்கு வருகின்றனர். முதலில் ஒரு ஜோதிடர் எழிலுக்கும் மனோகரிக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்துவதாக இருக்கிறது என்று சொல்ல மனோகரி சந்தோசப்படுகிறாள். இதையடுத்து, சுடர் போட்ட திட்டப்படி ராமையாக மாறுவேடத்தில் ஜோசியராக வந்து, இந்த ரெண்டு ஜாதகமும் சரியில்லை. இந்த இரண்டு பேருக்கும் பொருத்தமே சரியில்ல என்று ஷாக் கொடுக்கிறான்.

ஜோசியராக வந்த ராமையா: இதையடுத்து, இரண்டு ஜோசியர்களும் மாறி மாறி சண்டைபோட்டுக்கொண்டு இருக்க, கனவள்ளி குழப்பத்துடன் இதற்கு எதாவது பரிகாரம் இருக்கா என்று கேட்கிறாள். ஓ இருக்கே என்று ஜோசியராக வேஷம் போட்ட ராமையா. கல்யாணத்திற்கு முன்னாடி மனோகரி, மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு நான்கு நாள் விரதம் இருக்க வேண்டும். மேலும்,நாக்கில் அலகு குத்தி, தீ சட்டி எடுக்கணும் என்று சொல்ல குழந்தைகள் ராமையாவை பார்த்து சந்தேகப்படுகின்றனர். உடனே சுடர் அது ராமையா தான்
யார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்ல கூடாது என்று சொல்கிறாள்.

அலகு குத்தி தீ சட்டி: அடுத்து கோவிலில் ராமையா ஜோசியர் வேடத்தில் மனோகரிக்கு அலகு குத்தி தீ சட்டி எடுக்க வைக்க மனோகரி என்ன இப்படியெல்லாம் நடக்குது என்று கடுப்பாகிறாள், அடுத்த காட்சியில் இங்கு நடப்பதையெல்லாம் சுடரும் நான்கு குழந்தைகளும் தூரத்தில் பார்த்து சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X