மனோகரியை வலை வீசி தேடும் ரவுடிகள்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலுக்கும் மனோகரிக்கும் ஜாதகர் பொருத்தம் பார்க்க ஜோசியர் வீட்டிற்கு வந்து பத்து பொருத்தமும் சரியா இருக்கு என்கிறார். இதையடுத்து, சாமியாராக வரும் ராமையா பொருத்தம் இல்லை பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்.
கல்யாணத்திற்கு முன்னாடி மனோகரி, மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு நான்கு நாள் விரதம் இருக்க வேண்டும். மேலும்,நாக்கில் அலகு குத்தி, தீ சட்டி எடுக்கணும் என்று சொல்கிறார். கோவிலில் ராமையா ஜோசியர் வேடத்தில் மனோகரிக்கு அலகு குத்தி தீ சட்டி எடுக்க வைக்க மனோகரி என்ன இப்படியெல்லாம் நடக்குது என்று கடுப்பாகிறாள், அடுத்த காட்சியில் இங்கு நடப்பதையெல்லாம் சுடரும் நான்கு குழந்தைகளும் தூரத்தில் பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து நினைத்தேன் வந்தாய் சீரியலில் இன்று, சாமியாராக வேஷம் போட்ட, ராமையா மனோகரியை தலைக்கு மேல் கையை தூக்கிக்கொண்டு கும்பிடு போட்டு கொண்டு துளசி மாடத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி சுற்ற விட, சுடர் ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க என்று கேட்க அவ என்னை கொஞ்சம் நஞ்சமா கொடுமைப்படுத்தினா, அதற்கு பழிவாங்க இதுதான் சரியான நேரம் என்று சொல்கிறார். தூரத்தில் இருந்து இதையெல்லாம் இந்துவின் ஆவி பார்த்துக்கொண்டு இருக்கிறது.
கடுப்பான மனோகரி: பின் இந்துவின் ஆவி, தீபாவிடம் சுடர் எதுக்கு மனோகரியை இவ்வளவு கஷ்டப்படுத்துறா என்று கேட்க எனக்கும் அந்த மனோகரி மேல் சந்தேகம் இருக்கு.. அவ நல்லவ மாதிரியே தெரியல என்று சொல்கிறாள், அடுத்து செல்வி சோகமாக உட்காந்து இருக்கிறாள். அப்போது மனோகரி அங்கு வர, எழில் ஐயாவும் இந்து அம்மாவும் சேர்ந்து வாழ்ந்த 10 வருஷம் நீங்க எங்க போய் இருந்தீங்க என்று கேள்வி கேட்க மனோகரி கடுப்பாகிறாள்.
செல்வி கேட்ட கேள்வியால் பயங்கர கோபமடையும் மனோகரி, செல்வியின் கழுத்தை நெரித்து இது மாதிரி கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்குற வேலையை வெச்சிக்காதே என்று வார்னிங் கொடுக்கிறாள். அதன் பிறகு நான்கு ரவுடிகள் மனோகரி போட்டோவை காட்டி இவளை பார்த்தீங்களா? என்று விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











