சவால் விடும் சுடர்.. மனோகரி போடும் திட்டம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலுக்கு சிறந்த டாக்டருக்கான விருது கொடுக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் செழியன் பேசி முடித்து எழிலுக்கு விருது கொடுக்க இந்துமதி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள், கவின் ஜூஸ் பாட்டிலை எடுத்து அடிக்க அது டாக்டர் மீது பட்டு விட எழில் கோபப்பட்டு கவினை அறைய கை ஓங்குகிறான். அப்போது சுடர் வந்து தடுத்து விடுகிறாள்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளை பிடித்து எழில் திட்டிக்கொண்டு இருக்க, மனோகரி நீ நினைக்கிற மாதிரி பசங்க வளரணும்னா அதுக்கு ஒரே வழி தான் இருக்கு, அது ஹாஸ்டலில் சேர்க்கிறது தான் என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். எந்த குழந்தைகளால் உங்க பேரு கெட்டு போச்சோ அதே குழந்தைகளால் உங்க பேரை காப்பாத்துகிறேன். பசங்க ஸ்கூல்ல நடக்குற போட்டியில் அவங்களை கலந்துக்க வச்சி ஜெயிக்க வைக்கிறேன் என்று சொல்கிறாள். எதிலும் இதை சவாலாக எடுத்து அப்படி உன்னால பண்ண முடியலனா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கண்டிஷன் போடுகிறான் எழில், இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai Ganesh Venkatram Jasmine Rath

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், சுடர் குழந்தைகளை ஸ்கூலில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள, உங்க பேரு குழந்தைகளால் காப்பாற்றுவேன் என்று சொல்கிறாள். இதை இந்து, உனக்கு உறுதுணையா நான் இருக்கேன். குழந்தைகளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்க வைக்கலாம் என்று சொல்கிறாள். இதை அடுத்து மனோகரி மற்றும் செல்வி இருவரும் கூட்டு சேர்ந்து இந்த போட்டியில் குழந்தைகளை தோற்க வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர்.

Zee tamil Ninaithen Vandhai Ganesh Venkatram Jasmine Rath

சவாலில் ஜெயிப்பாரா: அடுத்ததாக குழந்தைகள் எல்லோரும் எப்படி கேமில் கலந்து கொண்டு ஜெயிப்பது என்ற பயத்தில் இருக்க சுடர் நான் காணாமல் போனபோது நீங்க தானே தைரியமா என்ன தேடி வந்தீங்க.. அப்படி இருக்கும் போது உங்களால கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று மோட்டிவேட் செய்கிறாள். இதைக் கேட்டு குழந்தைகளும் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம் என்று சவால் விட்டு மறுநாள் காலையில் ஸ்கூலில் போட்டிக்காக பெயர் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X