மனோகரி செய்த சூழ்ச்சி.. இந்துவால் நடக்கும் மேஜிக் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எப்போதும் குழந்தைகளை திட்டிக்கொண்டு இருக்கும் எழிலிடம், சண்டை போடும் சுடர், உங்க வாயாலையே என் பசங்க என்று சொல்லவைக்கிறேன் என்ற சவால் விடுகிறாள். இந்த சவாலுக்கு நானும்உனக்கு உறுதுணையா நான் இருக்கேன் என்று இந்துவும் சொல்கிறாள். குழந்தைகளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்க வைக்கலாம் என்று சொல்கிறாள். இதை அடுத்து மனோகரி மற்றும் செல்வி இருவரும் கூட்டு சேர்ந்து இந்த போட்டியில் குழந்தைகளை தோற்கவைக்க திட்டம் போடுகின்றனர்.
அடுத்ததாக குழந்தைகள் எல்லோரும் எப்படி கேமில் கலந்து கொண்டு ஜெயிப்பது என்ற பயத்தில் இருக்க சுடர் நான் காணாமல் போனபோது நீங்க தானே தைரியமா என்ன தேடி வந்தீங்க.. அப்படி இருக்கும் போது உங்களால கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று மோட்டிவேட் செய்கிறாள். இதைக் கேட்டு குழந்தைகளும் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம் என்று சவால் விட்டு மறுநாள் காலையில் ஸ்கூலில் போட்டிக்காக பெயர் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில். ஸ்கூலில் காம்பெடிஷன் தொடங்குகிறது, முதலில் அஞ்சலிக்கான பாட்டு போட்டி ஆரம்பிக்க நீ பிராக்டிஸ் டைம்லேயே சரியா பாடல என்று ப்ரண்ட்ஸ் கிண்டல் அடிக்க அவள் மேடை ஏறவே பயப்படுகிறாள். மேடை எறியும் பாடாமல் நிற்க இந்து நீ போய் அவங்க அப்பாவை கூட்டிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். சுடர் வெளியில் இருக்கும் எழிலை கூட்டி வந்து நிறுத்த அபி அழகாக பாடி முடிக்கிறாள்.
சண்டை போடும் சுடர்: இதனை தொடர்ந்து அடுத்ததாக கவினுக்கான டிராயிங் போட்டி தொடங்குகிறது, போட்டிக்கு தேவையான பொருட்கள் ஒரு முறை மட்டுமே கொடுக்கப்படும் என்று கண்டிஷனுடன் போட்டி தொடங்க கவினுக்கு கொடுக்கப்பட்ட சார்ட்டில் மனோகரி, தான் ஏற்பாடு செய்திருந்த ஆளை வைத்து, இங்கை கொட்டிவிடுகிறாள். இதை பார்த்து கவின் ஷாக் ஆகிறான். இதை கவனித்த சுடர்,பதற்றத்துடன் என்ன ஆச்சு என்று கேட்க, கவின் அந்த சார்டில் இங்க் கொண்டி இருப்பதை காட்டுகிறான். இதையடுத்து, இங்கு இருக்கும் ஆசிரியரிடம் சுடர், வேறு சார்ட் கேட்க அவர் கொடுக்க மறுக்கிறார்.

இந்துவால் நடக்கும் மேஜிக்: இந்த நேரத்தில், இந்து கவினை கண்ணை மூடிட்டு அவனுக்கு தோன்றுவதை வரைய சொல்லு என்று சொல்ல சுடரும் அப்படியே சொல்ல கண்ணை மூடிய கவனினுக்கு அம்மாவின் முகம் தோன்ற அவன் அதை அப்படியே கையாலேயே வரைந்து ஆச்சரியடுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











