மனோகரி செய்த சதி..அடுத்து நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஸ்கூலில் காம்பட்டிஷன் தொடங்குகிறது, முதலில் அஞ்சலி அழகாக பாடி முடிக்கிறாள். இதையடுத்து, கவினுக்கான டிராயிங் போட்டி தொடங்குகிறது, மனோகரி, தான் ஏற்பாடு செய்திருந்த ஆளை வைத்து, சார்ட்டில் இங்கை கொட்டிவிடுகிறாள்.

இதனால், கவின் எதுவுமே வரையாமல் அதிர்ச்சியில் இருக்க, இதை கவனித்த சுடர், பதற்றத்துடன் என்ன ஆச்சு என்று கேட்க, கவின் அந்த சார்டில் இங்க் கொண்டி இருப்பதை காட்டுகிறான். அப்போது, இந்து சுடரை அழைத்து கவினை கண்ணை மூடிட்டு அவனுக்கு தோன்றுவதை வரைய சொல்லு என்று சொல்ல, கவினும் அப்படியே வரைந்து முடிக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai Ganesh Venkatram Jasmine Rath

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், கவின் அம்மாவை வரைந்து இருப்பதை பார்த்து அனைத்து ஆசிரியர்களும் ஆச்சரியமடைய எழில் ஓடி போய் அவனை கட்டி பிடித்து முத்தமிட்டு கண் கலங்குகிறான். அந்த நேரத்தில், அங்கு இருக்கும் டீச்சர் ஒருவர் எழிலை பார்த்து விட்டு மீண்டும் மீண்டும் வந்து அவனிடம் வழிந்து பேசுவதை பார்த்து விடுகிறாள். என் புருஷன் கிட்டயா வழிய வழிய பேசுற என்று கோபப்பட்டு தீபாவை வைத்து டீச்சருக்கு அடி கொடுத்து ஓட விடுகிறாள்.

மனோகரி செய்த சதி: இதையடுத்து, அபி டிரஸ் காம்பட்டிஷனில் கலந்து கொள்ள தயாராகிறாள். இதற்காக செலக்ட் செய்து வைத்திருந்த ட்ரஸ்ஸை மனோகரி கத்தரி வைத்து கிழித்து விடுகிறாள். இதை அஞ்சலி பார்த்து விடுகிறாள். பிறகு அபியின் டிரஸ் கிழிந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக அஞ்சலி மனோகரி ஆண்ட்டி தான் ட்ரெஸ்ஸ கிழிச்சாங்க, நாம ஜெயிக்க கூடாதுனு தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்கிறாள். இந்த விஷயத்தை சுடர் இந்துவிடம் சொல்கிறாள். உடனே இந்து அந்த ட்ரெஸ்ஸை நான் சொல்ற மாதிரி தைத்து கொடு என்று சொல்ல, சுடரும் அப்படியே தைக்கிறாள்.

ஷாக்கான மனோகரி: அபி மேடை ஏற மாட்டா, அப்படியே ஏறினாலும் கிழிந்து போன துணியுடன் தான் ஏறுவா என்று சொல்லி கொண்டிருக்க அபி மேடை ஏற எல்லோரும் அவளது ட்ரெஸ்ஸை பார்த்து வாவ் என்று வாயை பிளக்கின்றனர். இதனால் மனோகரி ஷாக்காகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X