மகிழ்ச்சியில் சுடர்.. ஏமாந்த மனோகரியின் அடுத்த பிளான் என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஸ்கூலில் காம்பெடிஷனில் அஞ்சலி, கவின், அபி என அனைவரும் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துவிடுகிறார்கள். இதையடுத்து, எழில் கையில் அஞ்சலி விருது கொடுக்கிறாள், அதன் பிறகு சுடர் ஒரு டைரியை கொடுத்து படிக்க சொல்ல அதில் குழந்தைகள் எழிலை பெஸ்ட் அப்பாவாக எழுதி இருக்க அதை பார்த்து எழில் கண் கலங்குகிறான்.
என் குழந்தைக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா.. இதையெல்லாம் வெளியே கொண்டு வர நீ தான் காரணம் என்று நன்றி சொல்கிறான், பிறகு இவர்கள் வீட்டிற்கு வர குழந்தைகள் இனிமே எங்களை ஹாஸ்டலுக்கு அனுப்ப மாட்டீங்க தானே என்று கேட்க எழில் இல்ல அனுப்ப மாட்டேன், எப்பவும் எங்க கூட தான் இருப்பீங்க என்று சொல்ல குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகிழ்ச்சியில் எழில்: இதையடுத்து, நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், குழந்தைகள் இல்லை பெஸ்ட் டாடி என்று டைரியில் எழுதியதை நினைத்து சந்தோஷப்படும் எழில், இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று எழில் சுடருக்கு நன்றி சொல்கிறான். உனக்கு என்ன வேணும் கேளு என்று கேட்க சுடர், புடவை வேண்டும் என்று சொல்கிறாள். அதன் பிறகு குழந்தைகள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
சுடருக்கு புடவை: இதைத்தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி ஹாஸ்பிடலில் இருக்கும்போது மனோகரியிடம் ரொம்ப முக்கியமான ஒருவருக்கு புடவை எடுக்கணும் ஒரு நல்ல கடைக்கு கூட்டிட்டு போ என்று சொல்கிறான். மனோகரி எழில் தனக்குத்தான் புடவை எடுக்கப் போவதாக நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கடைக்கு அழைத்து செல்கிறாள். என்ன புடவைனு நீதான் செலக்ட் பண்ணனும் என்று சொல்ல, மனோகரி மனதிற்குள், எனக்குத்தானே புடவை எடுக்கிற என நினைத்து மனதிற்குள் பூரித்துப்போகிறாள். ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து எழிலுக்கும் தனக்கும் பிடித்தபடி ஒரு புடவையை தேர்வு செய்கிறாள்.
ஏமாந்த மனோகரி: பிறகு இருவரும் வீட்டுக்கு வர எழில் மனோகரியிடம் இருக்கும் புடவையை வாங்கி சுடரிடம் கொடுக்கிறான். அதைப் பார்த்து மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். அதே நேரத்தில் இந்து இதை பார்த்து பொசசிவ் ஆகிறாள். சுடர் புடவை சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி சார் என்றும் சொல்கிறாள். இப்படியான நிலையில்அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











