உங்களை பிடிக்கல.. அபி சொன்ன வார்த்தையால் உடைந்த எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், அபி யாருக்கும் தெரியாமல் பியூட்டி பார்லருக்கு சென்று முகத்திற்கு மேக்கப்போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு செல்கிறாள். அதை பார்த்து கடுப்பான டீச்சர் அபியை பிரின்ஸிபலிடம் அழைத்து செல்கிறார். பிரின்ஸிபல் அறைக்கு செல்லும் அபி, படிக்கவில்லை என்றால், கேளுங்கள் மேக்கப்போடுவதை கேட்காதீங்க என்கிறார்.

இதனால், ஆத்திரம் அடைந்த பிரின்ஸிபல் எழிலுக்கு போன் போட்டு, இப்படி எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக்கூடாது, அப்படி அனுப்புவதாக இருந்தால், உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று கோவப்பட்டு பேசுகிறாள். இதையடுத்து ஆத்திரத்தோடு வீட்டுக்கு வரும் எழில், மேக்கப் கிட்டை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு: இதையடுத்து, நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், எழில் அபியை கண்டிக்க அவள் எழிலை எதிர்த்து பேசுகிறாள், நாங்க கொடைக்கானல் போக முடிவெடுக்க காரணமே நீங்க தான், எங்க நாலு பேருக்குமே உங்களை சுத்தமா பிடிக்கல என்று சொல்ல எழில் உடைந்து போகிறான். இதனை தொடர்ந்து அவன் இந்து போட்டோ முன்பு நின்று பிள்ளைகள் தன்னை பிடிக்கவில்லை என்று சொன்னதை நினைத்து வருத்தப்பட அதை பார்த்து சுடரும் கவலைப்படுகிறாள், எப்படியாவது பிள்ளைகளை மாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.
ஹாஸ்டலுக்கு போங்க: எழில் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பதை தெரிந்து கொண்ட மனோகரி இதுதான், சந்தர்ப்பம் என்று எழில் ரூமுக்குள் வரும் மனோகரி பிள்ளைகள் இன்னும் இந்துவை மறக்கல, அது அவர்களின் பிரச்சனை, இதனால், குழந்தைகள் நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பது தான் சரி, அவங்களை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த, எழில் குழந்தைகள் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது, இனி மேல் இதுபோல பேசாதே என்று மனோகரி மீது கோபப்படுகிறான். எழிலின் பதிலால் கடுப்பான மனோகரி உன் பிள்ளைகளை வச்சே இதை சொல்ல வைக்கிறேன் என்று வெளியே வருகிறாள்.
என் விஷயத்தில் தலையிடாதே: இதையடுத்து, குழந்தைகளிடம் சென்ற மனோகரி, நீங்க ஹாஸ்டலுக்கு போய்டுங்க, நானும் ஹாஸ்டலில் தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கும் என்று மூளைச்சலவை செய்கிறாள். இதை தொடர்ந்து, சுடர் அபியின் ரூமுக்கு வந்து நீ அப்பாவிடம் அப்படி பேசி இருக்கக்கூடாது, ஸ்டாலுக்கு இப்படி போகக்கூடாது என்று அறிவுரை கூறுகிறாள். உடனே அபி, எனக்கு பிடிச்ச மாதிரி தான் நான் இருப்பேன், அவர் சொல்ற மாதிரி எல்லாம் இருக்க முடியாது. என் விஷயத்தில் நீ தலையிடாத என்று சுடரை சரமாரியாக திட்டிவிடுகிறாள்.
அடுத்து என்ன: இதையடுத்து, குழந்தைகளை என்ன செய்வது என்று யோசித்த சுடர் இவங்க கிட்ட அன்பா பேசுனா வேலைக்கு ஆகாது, நம்ம வேலையை காட்ட வேண்டியது தான் என்று முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











