கவின் மனதில் நஞ்சை விதைத்த மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். சீரியலின் நேற்றைய எபிசோடில், எழில் அபியை கண்டிக்க அவள் எழிலை எதிர்த்து பேசுகிறாள், நாங்க கொடைக்கானல் போக முடிவெடுக்க காரணமே நீங்க தான், எங்க நாலு பேருக்குமே உங்களை சுத்தமா பிடிக்கல என்று சொல்ல எழில் உடைந்து போகிறான்.

இதனை தொடர்ந்து எழில் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பதை தெரிந்து கொண்ட மனோகரி இதுதான், சந்தர்ப்பம் என்று எழில் ரூமுக்குள் வந்து, பிள்ளைகள் இன்னும் இந்துவை மறக்கல, அது தான் அவர்களின் பிரச்சனை, இதனால், குழந்தைகள் நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பது தான் சரி, அவங்களை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 13th episode

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த, எழில் குழந்தைகள் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது, இனி மேல் இதுபோல பேசாதே என்று மனோகரி மீது கோபப்படுகிறான். எழிலின் பதிலால் கடுப்பான மனோகரி உன் பிள்ளைகளை வச்சே இதை சொல்ல வைக்கிறேன் என்று வெளியே வருகிறாள் மனோகரி இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

மனோகரிக்கு சுடர் மீது வரும் சந்தேகம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், சுடர் பாஸ்போர்ட் ஏஜென்சி ஆபிசில் இருப்பதை பார்த்துவிட்டு சந்தேகப்படும் மனோகரி, போன் போட்டு எங்கே இருக்க என்று கேட்கிறாள். சுடர் அடையாறில் இருப்பதாக பொய் சொல்ல மனோகரிக்கு சந்தேகம் அதிகமாகி, எழிலிடம் சுடரை பத்தி நல்லா விசாரிச்சியா? அவ்வளவு பேக்ரவுண்ட் என்னனு தெரியுமா, சர்டிபிகேட் எல்லாம் வாங்கி பார்த்தியா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.

கடுப்பான எழில்: மனோகரியின் கேள்வியால் கடுப்பான எழில், 30 நாள்ல எப்படியும் போய்டுவா அவளை பத்தி எதுக்கு இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கே அதுவுமில்லாம, அம்மா தான் அவள வேலைக்கு எடுத்தாங்க அம்மா அவ ரொம்ப நல்லவன்னு தான் சொல்றாங்க என்று சொல்லி திட்டி அனுப்ப, எனக்கும் எழிலுக்கும் நடுவில் யாரும் வரக்கூடாது, வந்தா சும்மா விடமாட்டேன் என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் மனோகரி.

Zee tamil television Ninaithen Vandhai serial March 13th episode

அபியை மாற்றிய சுடர்: அதைத்தொடர்ந்து குழந்தைகளை ஸ்கூலில் டிராப் செய்யும் சுடர் அபியை மட்டும் ஒரு நிமிஷம் என் கூட வா என்று ஒரு டீக்கடைக்கு கூட்டிச்சென்று டீ மாஸ்டரை காட்டி இவரை பார்த்தா உனக்கு என்ன தோணுது என்று கேட்க அபி ஒன்னும் தோணல என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து ஒரு மெக்கானிக் ஷாப் கூட்டிட்டு போய் இந்த மெக்கானிக் பார்த்தால் என்ன தோணுது என்று கேட்க அப்போதும் ஒன்றும் தோணல என சொல்கிறாள்.

தவறை உணர்ந்த அபி: பிறகு அவளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து அங்கிருக்கும் பசங்களை காட்டி இவர்களில் டீக்கடைக்கார குழந்தையும் படிக்கிறாங்க, மெக்கானிக்கோட குழந்தையும் படிக்கிறாங்க, ஆட்டோக்காரரோட குழந்தையும் படிக்கிறாங்க அவங்க யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லு என்று கேட்க அது எப்படி கண்டுபிடிக்க முடியும் இது ஸ்கூல் இங்கே எல்லாரும் யூனிபார்ம்ல தான் இருப்பாங்க என்று சொல்கிறாள். அதேதான் இங்கு எல்லாரும் ஒரே மாதிரி இருக்கும்போது நீ மட்டும் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தா யாரும் உன்னை பிரண்டா ஏத்துக்க மாட்டாங்க என்று அட்வைஸ் சொல்ல அபி முகம் மாறுகிறது.

டிரைவர் வேலையை மட்டும் பாரு: அடுத்து மனோகரி வீட்டில் செல்வியை வைத்துக்கொண்டு குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்க்க அப்ளிகேஷன் ரெடி செய்து கொண்டு அதைப்பற்றி பேச இதைக் கேட்ட ராமையா யாரை ஹாஸ்பிடல்ல சேர்க்க போறீங்க என கேட்கிறார். மனோகரி குழந்தைகளை தான் ஹாஸ்பிடல்ல சேர்க்க போறேன் என்று சொல்ல எழிலுக்கு ஆதரவா இருக்கிறது குழந்தைங்க தான் அவங்கள பிரிக்கப் போறீங்களா என்று கேட்கிறார். நீ இங்க டிரைவர் தானே அந்த வேலையை மட்டும் பாரு என்று ராமையாவை அவமானப்படுத்த அவர் மனம் உடைந்து போய் வெளியே வந்து உட்காருகிறார்.

மனோகரியின் அடுத்த பிளான்: அடுத்ததாக கவின் மனோகரியுடன் நெளிந்து நெளிந்து செல்ல என்ன விஷயம் என்று கேட்க ஸ்கூல்ல ரேங்க் சீட் கொடுத்து இருக்காங்க எல்லாத்துலயும் மார்க் கம்மியா எடுத்திருக்கேன் அப்பா கையெழுத்து போட மாட்டாரு என்று சொல்ல நீதான் நல்லா டிராயிங் பண்ணல உங்க அப்பாவோட கையெழுத்தை நீயே போட்டுக்க நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன் என்று சொல்லி கவினை ரேங்க் சீட்டில் கையெழுத்து போட வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X