எழில் போட்ட கண்டிஷன்.. அப்பாவை மீறி அபி எடுத்த முடிவு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஸ்கூலில் ஃபாதர்ஸ் டேவை முன்னிட்டு அவங்க அப்பா வேலை செய்யும் இடத்துக்கு போய் அவங்க அப்பா என்ன வேலை செய்கிறார் எப்படி வேலை செய்கிறாய் என்பது பற்றி அசைன்மென்ட் செய்ய வேண்டும் அபி சொல்கிறாள்.

இதுக்கு அப்பா ஒத்துக்கவே மாட்டாரு என்று அபி புலம்ப, உங்களுக்காக அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்கிறாள். உன்னால முடியாது என்று அபி சுடரை வெறுப்பேற்ற, எழிலிடம் பேசி சுடர் அனுமதி வாங்கி விடுகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 15th episode

இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, பிள்ளைகள் நான்கு பேரும் எழிலுடன் ஹாஸ்பிடல் கிளம்ப கனகவல்லி சுடரை போக வேண்டாம் என தடுத்து நிறுத்தி விடுகிறாள். இவர்கள் கிளம்பிய பிறகு பசங்களே எப்பயாச்சு தான் அப்பாவோட சேர்ந்திருக்காங்க அதனாலதான் உன்னை போக வேணாம்னு சொன்னேன் என்று சொல்ல சுடரும் அதை ஏற்றுக் கொள்கிறாள். பிள்ளைகள் காரில் போகும்போது ராமையா ஹாஸ்பிடல்ல எந்த அமர்க்களமும் செய்யக்கூடாது அப்பா சொல்றதை கேட்டு அமைதியா இருக்கணும் என்று சொல்ல குழந்தைகள் ராமையாவை கலாய்கின்றனர்.

கண்டிஷன் போடும் எழில்: அடுத்து இவர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க எழில் நீங்க இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது இது டேஞ்சரான ரூம் என கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டு சரி எனக்கு வேலை இருக்கு ரமேஷ் டாக்டர் வந்து உங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை சொல்லிக் கொடுப்பாரு என்று சொல்லி கிளம்புகிறான்.

அப்பா பேச்சை மீறும் அபி: ரூமுக்குள் இருக்கும் பிள்ளைகள் இங்கும் அங்கும் சற்றி கண்டதை தொட்டு சேட்டை செய்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து டாக்டர் ரமேஷூம் வராததால் அபி, ரூமுக்குள்ள இருந்தா எப்படி அசைன்மென்ட் பண்றது வாங்க வெளிய போகலாம் என்று சொல்லி எல்லோரையும் வெளியே கூட்டி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X