லிஃப்ட்டுக்குள் சிக்கிய காவியா.. குழந்தையை காப்பாற்ற போராடிய எழில்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள் நான்கு பேரும் எழிலுடன் ஹாஸ்பிடல் கிளம்ப கனகவல்லி சுடரை போக வேண்டாம் என தடுத்து நிறுத்தி விடுகிறாள். இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க எழில் நீங்க இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது இது டேஞ்சரான ரூம் என கண்டிஷன் மேல கண்டிஷன் போடுகிறார்.
ரூமுக்குள் இருக்கும் பிள்ளைகள் இங்கும் அங்கும் சற்றி கண்டதை தொட்டு சேட்டை செய்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து டாக்டர் ரமேஷூம் வராததால் அபி, ரூமுக்குள்ள இருந்தா எப்படி அசைன்மென்ட் பண்றது வாங்க வெளிய போகலாம் என்று சொல்லி எல்லோரையும் வெளியே கூட்டி வருகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் சீரியலில் இன்று, குழந்தைகள் அனைவரும் ரமேஷ் டாக்டரை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ரமேஷ் ஒரு பக்கம் குழந்தைகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். மருத்துவமனை முழுவதும் தேடியும் எழில் கிடைக்காததால், குழந்தைகள் நான்கு பேரும் சோர்ந்து போய்விடுகிறார்கள். இதனால், காவியா, இனி மேல் நாம் இங்கே இருக்க வேண்டாம். அப்பா இருக்க சொன்ன இடத்திற்கே போகலாம் என்று சொல்கிறார்.
லிப்ட்டில் சிக்கிய காவியா: ஆனால்,அபியோ, அதெல்லாம் வேண்டாம் இங்கே இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்க கடுப்பான காவியா, அங்கிருந்த லிப்ட்டுக்குள் சென்று விடுகிறாள். ஆனால், அந்த லிப்ட்டில் வேலை நடந்து கொண்டு இருப்பதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் காவியா சொல்ல லிப்ட் மூடிக்கொள்கிறது. இதனால், பயந்து போன காவியா அழத்தொடங்க வெளியிலிருந்த அபி, யாராவது காப்பாத்துங்க என்று கத்துகிறாள்.
காப்பாற்ற துடிக்கும் எழில்: குழந்தைகள் கத்தும் சத்தம் கேட்டு ஓடிவந்த ஏழில் நான், உங்களை ரூமில் தானே இருக்க சொன்னேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறான். இதனால், பதறிப்போன அபி, அப்பா காவியாவை எப்படியாவது காப்பாத்துங்க என்று கத்துகிறான். உடனே எழியில் பயப்படாதே அபி, அப்பா காவியாவை எப்படியாவது காப்பாற்றுவேன் என்று லிப்டை முட்டி மோதி திறக்கிறான்.


Click it and Unblock the Notifications











