மகளை காப்பாற்ற போராடும் எழில்.. நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நீண்ட நேரம் காத்திருந்து டாக்டர் ரமேஷூம் வராததால் அபி, ரூமுக்குள்ள இருந்தா எப்படி அசைன்மென்ட் பண்றது வாங்க வெளிய போகலாம் என்று சொல்லி எல்லோரையும் வெளியே கூட்டி வருகிறாள். ரூமில் குழந்தைகளை காணவில்லை, என ரமேஷ் டாக்டரை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
டாக்டர் ரமேஷ் ஒரு பக்கம் குழந்தைகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். மருத்துவமனை முழுவதும் தேடியும் எழில் கிடைக்காததால், குழந்தைகள் நான்கு பேரும் சோர்ந்து போய்விடுகிறார்கள். இதனால், காவியா, இனி மேல் நாம் இங்கே இருக்க வேண்டாம். அப்பா இருக்க சொன்ன இடத்திற்கே போகலாம் என்று சொல்லி, லிப்ட் மெயின்டன் வேலை நடக்கிறது என்று பார்க்கலாமல் உள்ளே சென்றுவிடுகிறாள். இதையடுத்து, அபி கத்தும் சத்தம் கேட்டு ஓடிவரும் எழியில், லிப்ட்டுக்குள் இருக்கும் காவியாவை காப்பாற்ற போராடுகிறான்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், லிப்ட்டுக்குள் இருக்கும் காவியா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்ததால், அழாதே காவியா அப்பா உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுகிறேன் என்கிறான். இதையடுத்து, உங்களை ரூமில் தானே இருக்க சொன்னேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறான். இதனால், பதறிப்போன அபி, அப்பா காவியாவை எப்படியாவது காப்பாத்துங்க என்று கத்துகிறான். உடனே எழியில் பயப்படாதே அபி, அப்பா காவியாவை எப்படியாவது காப்பாற்றுவேன் என்று லிப்டை முட்டி மோதி திறக்கிறான்.

எவ்வளவு முயற்சி செய்தும் லிப்டை திறக்க முடியாததால், லிப்ட் மெயின்டன் செய்பவர்களுக்கு போன் போட்டு காவியாவை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறான். அவர்கள் சிலர் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் வாங்க மீண்டும் கொஞ்ச நேரம் ஆகும் என சொல்லி விடுகின்றனர். இதனால் எழிலே தனது கையால் லிஃப்டை ஓபன் செய்து காவியாவை காப்பாற்ற போக அப்பாவை பார்த்ததும் காவியா தெரியாம வந்துட்டேன் அப்பா மன்னிச்சிடுங்க என்று பயந்து போய் கெஞ்சி நடுங்க எழில் அம்மா பாட்டு போட்டு காவியாவை கூல் செய்கிறான்.

அட்வைஸ்: பிறகு மற்ற குழந்தைகளை பிடித்து திட்டி ராமையாவிடம் குழந்தைகளை கூட்டிச் செல்ல சொல்ல சுடர் நானும் அம்மாவை இழந்த பொண்ணுதான். என்னை வளர்த்தது எங்க அப்பா தான். அவருடைய பாசத்துல நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன் அப்படி இருக்கும்போது இங்க ஏன் உங்க பிள்ளைங்க கிட்ட பாசமா இருக்க மாட்டீங்க என அட்வைஸ் கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன் வந்தாய் சீரியலை பாருங்க.


Click it and Unblock the Notifications











