வசமாக சிக்கிய கவின்.. சுடரைத் தேடி வந்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வேலு சுடரைத் தேடி போலீஸ் ஸ்டேஷன் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 1st episode

இன்றைய எபிசோடு: அதாவது வேலு போலீஸிடம் போட்டோவை காட்டி இந்த பொண்ண பார்த்து இருக்கீங்களா என்று விசாரிக்க பார்த்திருக்கும் இதே ஸ்டேஷனுக்கு வந்து போச்சு என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில் எழில் இந்துமதி கேஸ் குறித்து பேச இதே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்க போலீஸ் இவரோட தான் இந்த பொண்ணு வந்துச்சு என்று கை காட்டுகின்றனர்.

என்கூட பேசமாட்டியா: வேலு முகத்தைப் பார்ப்பதற்குள் எழில் அங்கிருந்து கிளம்பி விட அவனது நண்பன் இவர்தான் எழில் ஹாஸ்பிடல் போய் பாரு என போனில் போட்டோவை எடுத்து காட்டுகிறான். அடுத்ததாக அஞ்சலி அமைதியாக உட்கார்ந்து இருக்க சுடர் என்கிட்ட பேச மாட்டியா என்று கேட்க பேச மாட்டேன் நான் அபியோட டீம் அபி உன்கூட பேச கூடாதுன்னு சொல்லிட்டா என்று கூறுகிறாள்.

பிரண்டான சுடர்: இதையடுத்து அபி மேல வர அய்யய்யோ அபி பார்த்தா நீயும் நானும் பேசுறதா நினைச்சுப்பா நான் மாட்டிகிட்டேன் என்று அஞ்சலி பயப்பட நீ ஒளிஞ்சிக்க நான் நீ வரலைன்னு சொல்லி சமாளிச்சுடறேன் என்று சொல்ல அஞ்சலி ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறாள். பிறகு அபி அஞ்சலியை தேடி வர, சுடர் அவ இங்க இல்ல அவ உன்னுடைய குரூப் தானே என்று சொல்லி அனுப்புகிறாள். இதையடுத்து அஞ்சலிக்கும் சுடர்க்கும் இடையே ஒரு பாண்டிங் உருவாகிறது. இருவரும் பிரண்ட்ஸ் ஆகி விடுகின்றனர். மறுநாள் காலையில் மனோகரை குழந்தைகளுக்கு பால் கொண்டு வந்து கொடுத்து விட சுடர் வரும் சத்தம் கேட்டு அபி கவின் ஆகியோர் இந்த பால குடிச்சிட்டு சுடர் கொண்டு வர பால வேண்டாம்னு திருப்பி அனுப்பனும் என்று பிளான் போட்டு பாலைக் குடிக்கின்றனர்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 1st episode

அடம்பிடிக்கும் குழந்தைகள்: பிறகு சுடர் கையில் பாலுடன் வர எல்லோரும் நாங்க குடிச்சிட்டோம். அதை நீயே குடி என்று சொல்லிவிட்டு செல்ல அஞ்சலி எல்லோரும் சென்ற பிறகு எதுவும் பேசாமல் சுடர் கொண்டு வந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். இதனைத் தொடர்ந்து கவின் உட்பட குழந்தைகள் எல்லோரும் கனகவல்லியிடம் சாலட் எங்களுக்கு வேண்டாம். பிடிக்கல அப்பா வரதுக்குள்ள வேற ஏதாச்சும் இருந்தா குடுங்க என்று பேசிக்கொண்டு இருக்க கனகவல்லி சாலட் தான் சாப்பிடணும் என்று சொல்லிவிடுகிறாள்.

அடுத்து என்ன நடக்கபோகுதோ: இதனால் கவின் மற்றவர்களுடன் சேர்ந்து ஸ்கூல் போனதும் கேண்டினில் சாப்பிடலாம் என்று சொல்ல இதை பின்னாடி இருந்து கேட்டு விடும் எழில் இனிமே உங்களுக்கு பாக்கெட் மணி கிடையாது ராமையா ரூம்ல எங்கயாச்சும் பணம் வைத்திருந்தால் எல்லாத்தையும் தேடி எடுத்துட்டு வாங்க என்று அதட்டி அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X