குடிபோதையில் தடுமாறி வந்த எழில்.. சுடர் எடுத்த முடிவு .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், லிப்டில் காவியா சிக்கிக் கொள்ள எழில் திறக்க முடியாமல் கஸ்டப்படுகிறான். பின் லிப்ட் மெயின்டன் செய்பவர்களுக்கு போன் போட்டு காவியாவை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறான். அவர்கள் சிலர் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் வாங்க மீண்டும் கொஞ்ச நேரம் ஆகும் என சொல்ல, எழிலே தனது கையால் லிஃப்டை ஓபன் செய்து காவியாவை படாத பாடுபட்டு காப்பற்றிவிடுகிறான்.
இதையடுத்து, என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா, நான் ரூம்ல தானே இருக்க சொன்னேன் என்று குழந்தைகளை பிடித்து திட்டுகிறான் எழில், இதை பார்த்துக் கொண்டிருந்த சுடர், குழந்தைகளை எதுக்கு இப்படி திட்டுறீங்க, அவங்களுக்கு என்ன தெரியும், நானும் அம்மாவை இழந்த பொண்ணுதான். என்னை வளர்த்தது எங்க அப்பா தான். அவருடைய பாசத்துல தான் நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். அப்படி இருக்கும்போது ஏன் உங்க பிள்ளைங்க கிட்ட பாசமா இருக்க மாட்டீங்க என அட்வைஸ் கூறுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், சுடர் திட்டியதை நினைத்து நினைத்து டென்ஷனான எழில், குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். அவர் போதையில் இருப்பதை தெரிந்து கொண்ட சுடர், அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்கிறாள். பிறகு எழில் சுடரை இந்து என நினைத்து என்னை விட்டு போயிடாதே என்ற சுடரின் கையை பிடித்து கெஞ்சுகிறான். பின் நான் எப்போதும் உன்னை நினைத்து ஒரு பாட்டு பாடுவேனே அதை கேளு என்று, சுடரிடம் காதலித்து காதலித்து காத்திருந்தேன் பாடலை பாடுகிறான்.

கடுப்பான மனோகரி: இதையெல்லாம், பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த சுடர், மனசுக்குள்ள இவ்வளவு பாசத்தை வச்சிக்கிட்டு எதுக்கு இப்படி இருக்கணும்? பசங்களுக்கு இவருடைய பாசத்தை புரிய வைக்கணும் அதுதான் இனி என்னுடைய வேலை என முடிவெடுக்கிறாள். இதையடுத்து, எழிலை கை தாங்கலாக பெட்ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைக்கிறாள். இதை துரத்தில் இருந்து பார்த்த மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். இவளை எப்படியாவது வெளியில் அனுப்பிவிட வேண்டும் என்று பிளான் போடுகிறாள்.

ஓடி ஒளியும் எழில் : இதையடுத்து மறுநாள் போதை தெளிந்து எழுந்த எழில், நேத்து குடிச்சிட்டு யார்கிட்டயோ என்னமோ சொன்னேனே என்று யோசிச்சு பார்க்க, சுடரிடம் என்னை விட்டு போகாதே என்று சொன்னது நினைவுக்கு வர, அய்யோ மானமே போச்சு என்று, சுடர் முகத்தை பார்க்க முடியாமல் ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











