சுடரை தாங்கி பிடித்த எழில்.. அடுத்து காத்திருக்கும் பிரச்சனை ..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி ஏதாவது செய்து இவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்னு முடிவெடுக்கிறாள். பிறகு குழந்தைகளிடம் வெளில எங்கயாச்சும் போயிட்டு வரலாமே என்று சொல்ல குழந்தைகள் அப்பா எங்களை வெளியில் அனுப்ப மாட்டாரு என்று சொல்ல, நான் பேசினா உங்க அப்பா ஓகே சொல்லிவிடுவாரு என்று எழிலிடம் பேசி சம்மதம் வாங்கி விடுகிறாள்.
சுடர் குழந்தைகளையும் பீச்சுக்கு அனுப்பி வைத்து குழந்தைகள் ஏதாவது ஆக வைத்து விட்டால், எழில் சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவான் என்று பிளான் போடுகிறாள். அந்த நேரம் சுடர் ,குழந்தைகளோடு நீங்களும் பீச்சுக்கு வாங்க என்று எழிலை அழைக்க, எழிலும் குழந்தைகளோடு பீச்சுக்கு செல்கிறார். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: அன்றைய எபிசோடில், குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக ரெடியாகிக் கொண்டிருக்க, சுடர் நம்மக்கூட எழில் அப்பாவும் வராரு என்றுசொன்னதை கேட்டு, குழந்தைகள் ஷாக்காகின்றனர். மனோகரியும் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். நீங்க என் பேச்சை கண்டிப்பா மதிக்க மாட்டீங்க, ஓவரா சேட்டை பண்ணுவீங்க உங்களை என்னால தனியாக கண்ட்ரோல் பண்ண முடியாது அதனாலதான் அவர வர வச்சேன் என சொல்ல குழந்தைகள் சுடர் மீது கோபப்படுகின்றனர்.
தீம் பார்க்குக்கு வரும் எழில்: இதனை தொடர்ந்து ஹாஸ்பிடலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த மனோகரி, இப்ப நாம போகலனா பிரச்சனை வேற மாதிரி போயிடும் என யோசித்து, ஏதோ ஒரு காரணத்தை சொல்லி உங்களோடு நானும் வருகிறேன் என்கிறாள். இதையடுத்து அனைவரும்,ஜாலியாக தீம் பார்க்கிற்கு செல்கின்றனர். வெளியில் வந்ததும் குழந்தைகள் அனைவரும் துள்ளி குதிக்கிறார்கள்.
கடுப்பான மனோகரி: இதைப்பார்த்த எழில், இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது என கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால்,அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத குழந்தைகள், உள்ளே நுழைந்ததும் இங்குமங்குமாக ஓடுகின்றனர். அவர்களை ஒரு பக்கம் சுடர் மடக்கி பிடிக்க, மறுபக்கம் எழில் பிடிக்க ஓடுவதுமாக இருக்கிறார்கள். இப்படியே இருவரும் ஓடிக்கொண்டு இருக்க, எழில் சுடர் மீது மோதி, சுடர் கீழே விழ போக எழில் அவளை தாங்கி பிடிக்கிறான்.
தேடி வரும் வேலு: இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதியதைப் பார்த்து கடுப்பான, ஏற்பாடு செய்து வைத்திருந்த அடியாட்களுக்கு போன் செய்து சொன்ன மாதிரி செய்யனும் என்கிறாள். இது ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க, வேலுவுக்கு தெரிந்த போலீஸ், சுடர் தீம் பார்க் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல, வேலு தீம் பார்க்கிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











