சுடர் வேலுவிடம் சிக்குவாளா? எழில் காப்பாற்றுவாரா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகளை பீச்சுக்கு அனுப்பி, அதில் ஏதாவது கோளாறு செய்ய மனோகரி திட்டம் போட்டிருந்த நிலையில், குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக ரெடியாகிக் கொண்டிருக்க, சுடர் நம்மக்கூட எழில் அப்பாவும் வராரு என்று சொன்னதை கேட்டு, குழந்தைகள் ஷாக்காகின்றனர்.

மனோகரியும் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். நீங்க என் பேச்சை கண்டிப்பா மதிக்க மாட்டீங்க, ஓவரா சேட்டை பண்ணுவீங்க உங்களை என்னால தனியாக கண்ட்ரோல் பண்ண முடியாது அதனாலதான் அவர வர வச்சேன் என சொல்ல குழந்தைகள் சுடர் மீது கோபப்படுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 25th today episode

தீம் பார்க்கிற்கு வரும் எழில்: இதனை தொடர்ந்து ஹாஸ்பிடலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த மனோகரி, நான் கேட்கும் போது, நீங்க எதுவுமே சொல்லலயே என்றும், ஹஸ்பிடலில் மீட்டிங் இருக்கே என்று எழிலிடம் சொல்ல, எல்லாத்தையும் நீ பாத்துக்கோ நான் இன்னைக்கு பசங்க கூட பீச் போகபோகிறேன் என்கிறான். என்னடா நம்ம ஒரு பிளான் போட்டா சுடர் வேற பிளான் போட்டு கெடுத்துவிட்டாளே என் நினைத்துக்கொண்டு இருக்க, அனைவரும் காரில் கிளம்ப, கடுப்பான மனோகரி, இப்ப நாம போகலனா பிரச்சனை வேற மாதிரி போயிடும் என யோசித்து, ஏதோ ஒரு காரணத்தை சொல்லி உங்களோடு நானும் வருகிறேன் என்கிறாள்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், தீம் பார்க்கிற்கு வந்ததும், எழில் குழந்தைகளிடம், இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது என கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டுக்கொண்டே இருப்பதால் கடுப்பான குழந்தைகள், அப்பாக்கூட இப்படி வெளியில் வருவதற்கு ஸ்கூலுக்கே போய் இருக்கலாம் என்று புலம்ப, சுடர் அப்பா கிட்ட நல்ல பெயர் எடுக்கத்தான் இப்படி எல்லாம் செய்கிறாள். அவளுக்கு அப்பா கிட்ட நல்ல பெயர் கிடைக்கக்கூடாது என்று வேண்டுமென்றே ஓவர் ஆட்டம் போடுகிறார்கள்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 25th today episode

கடுப்பான மனோகரி: வரம்பு மீறி விளையாடிய குழந்தைகளை ஒரு பக்கம் சுடர் மடக்கி பிடிக்க, மறுபக்கம் எழில் பிடிக்க ஓடுவதுமாக இருக்கிறார்கள். இப்படியே இருவரும் ஓடிக்கொண்டு இருக்க, எழில் சுடர் மீது மோதி, சுடர் கீழே விழ போக எழில் அவளை தாங்கி பிடிக்கிறான். இதைப்பார்த்து கடுப்பான மனோகரி, ஏற்பாடு செய்து வைத்திருந்த அடியாட்களுக்கு போன் செய்து சொன்ன மாதிரி செய்யனும் என்கிறாள்.

வேலுவுடன் வாக்குவாதம்: வேலுவுக்கு தெரிந்த போலீஸ், சுடர் தீம் பார்க் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல, வேலு தீம் பார்க்கிற்கு வந்து சுடரைத் தேடிக்கொண்டு இருக்கிறான். அப்போது எழில் போனில் பேசிக் கொண்டிருக்க புகைப்பிடிக்கும் ஸ்மெல் வந்து கொண்டே இருக்க பின்னாடி திரும்பி பார்க்க, அங்கு வேலு தம் அடித்து கொண்டிருக்கிறான். இது பொது இடம் இந்த இடத்தில் தம் அடிக்கக்கூடாது, பசங்க எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். ஆனால், அதை காதில் வாங்கிக் கொள்ளாத வேலு, எழிலைப்பார்த்து என்னடா முறைக்கிற என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

அடுத்து நடக்கப்போவது என்ன: பிறகு எழில் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட வேலுவுக்கு, அந்த போலீஸ்காரர் சொன்ன பழைய விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. போலிஸ் சொன்ன டாக்டர் இவரா இருக்குமோ என்று யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? எழிலுடன் வந்துள்ள சுடர் வேலுவிடம் சிக்குவாளா? எழில் சுடரை காப்பாற்றுவானா? என்பதை தெரிந்து கொள்ள உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தேன் வந்தாய் சீரியலை காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X