அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர்.. நடந்தது என்ன நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், தீம் பார்க்கிற்கு வந்ததும், குழந்தைகள் வரம்பு மீறி விளையாட ஒரு பக்கம் சுடர் மடக்கி பிடிக்க, மறுபக்கம் எழில் பிடிக்க ஓடுவதுமாக இருக்கிறார்கள். இப்படியே இருவரும் ஓடிக்கொண்டு இருக்க, எழில் சுடர் மீது மோதி, சுடர் கீழே விழ போக, எழில் அவளை தாங்கி பிடிக்கிறான். இதைப்பார்த்து கடுப்பான மனோகரி, ஏற்பாடு செய்து வைத்திருந்த அடியாட்களுக்கு போன் செய்து சொன்ன மாதிரி செய்யனும் என்கிறாள்.
சுடரைத் தேடி தீம் பார்க் வந்திருக்கும் வேலு, சுடரைத் தேடிக்கொண்டு இருக்கிறான். அப்போது எழில் போனில் பேசிக் கொண்டிருக்க புகைப்பிடிக்கும் ஸ்மெல் வந்து கொண்டே இருக்க பின்னாடி திரும்பி பார்க்க, அங்கு வேலு தம் அடித்து கொண்டிருக்கிறான். இது பொது இடம் இந்த இடத்தில் தம் அடிக்கக்கூடாது, பசங்க எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் அது வாக்குவாதமாக மாறிவிடுகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

இன்றைய எபிசோட்: இதையடுத்து, நினைத்தேன் வந்தாய் எபிசோடில் இன்றும், குழந்தைகள் ராட்டினத்தில் ஏற்றிவிட்டு எழிலும் சுடரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க. ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அபி சத்தம் போட்டு கத்துகிறாள். அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான். அதேபோல் சுடரும் என்ன ஆச்சு என்று பதறி அடித்து ஓடிவருகிறாள். பின் அபியிடம் என் ஆச்சு என்று கேட்க, சும்மா ஃபன்-க்கு என்று சொல்ல கடுப்பான எழில், சுடர் உயிரை பணயம் வைத்து ஓடி வந்திருக்கா இதெல்லாம் உனக்கு ஃபன்னா என்று கேட்டு அபியை திட்டுகிறான்.

மனம் மாறும் எழில்: மேலும் சுடர் குழந்தைகள் மீது காட்டும் அக்கறையை பார்த்து எழிலுக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் உருவாக தொடங்குகிறது. இதைப் பார்த்து மனோகரி கடுப்பாகிறாள். இதையடுத்து, அனைவரும் ரெஸ்டாரண்டில் சாப்பிட போக எழில் குழந்தைகளுக்கு இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போட, சார் விடுங்க பசங்க எப்போதாவது தான் வராங்க, அவங்களுக்கு பிடிச்சத சாப்பிடட்டுமே என்று அவன் மனதை மாற்றுகிறாள். மறுபக்கம் வேலு, டாக்டர் எழிலை தேடி பிடித்தால் சுடர் பற்றி தெரிந்து விடும் என தீவிரமாக தேடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











