மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள் ராட்டினத்தில் ஏற்றிவிட்டு ஏழிலும் சுடரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க. ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அபி சத்தம் போட்டு கத்துகிறாள். அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான். அதேபோல் சுடரும் என்ன ஆச்சு என்று பதறி அடித்து ஓடிவருகிறாள்.

அதையடுத்து, குழந்தைகளோடு குழந்தைகளாக எழில் விளையாடுகிறான். மேலும் அஞ்சலி சுடர் கையை பிடித்துக்கொண்டே விளையாடுவதை பார்த்த எழில், குழந்தைகள் மீது சுடம் காட்டும் அக்கறையை பார்த்து எழிலுக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் உருவாக தொடங்குகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், அடுத்த ரைடுக்கு செல்ல அனைவரும் தயாராக அஞ்சலி குட்டியாக இருப்பதால் அவளை ரைட் அனுமதிக்க முடியாது என சொல்லி விடுகின்றனர். அதான் சுடர் இருக்காளே அவ பார்த்துப்பா என்று சொல்ல அவ தனியாக இருக்கா நீயும் கூட போய் நில்லு என்று சொல்லி மனோகரியை அனுப்பி வைக்க அவள் கடுப்பாகிறாள். இதையடுத்து ஒரு ரைட் போய்ட்டு வந்ததும், அடுத்ததா நாம மூணு பேரும் ஒண்ணா போகலாம் என்று சொல்லி அஞ்சலி எழிலை கூப்பிட, எழில் சுடர் மற்றும் அஞ்சலி என மூவரும் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து ரைட் செல்கின்றனர். அதை பார்த்து மனோகரி கடும் கோபம் அடைகிறாள்.

ஆபத்தில் கவின்: இதுக்கு மேல இவங்களை இப்படியே விட்டால் சரிபட்டு வராது, என்று ரவுடிகளுக்கு போன் போட்டு, நீச்சல் அடித்துக்கொண்டு இருக்கும் கவினை நீச்சல் குளத்திலேயே தண்ணீருக்குள் வைத்து அமுக்கி விடுமாறு சொல்ல, ரவுடிகளும் நீச்சல் குளத்திற்குள் குதித்து கவினை தண்ணீருக்குள் அழுத்த முயற்சி செய்கின்றனர். இதையடுத்து ரவுடிகள் பிடியில் சிக்கும் கவின் தண்ணீரில் தத்தளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











