வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நீச்சல் குளத்தில் தவித்த கவினை காப்பாற்ற,சுடர் நீச்சல் குளத்தில் குதிக்க அவளும் நீச்சல் தெரியாமல் சிக்கி கொள்கிறாள். பிறகு எழில் நீச்சல் குளத்தில் குதித்து இருவரையும் காப்பாற்றுகிறான். சுடர் தண்ணீரை குடித்து மயங்கி கிடக்க எழில் முதலுதவி கொடுத்து அவளை காப்பாற்றுகிறான்.
இதையடுத்து, அனைவரும் இங்கு இருக்க கூடாது என்று எழில் முடிவெடுக்க எல்லாரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். இந்த நேரத்தில் வேலு சுடரை பார்த்து விட அவளை துரத்தி வர ஒரு கட்டத்தில் சுடர் எஸ்கேப் ஆகிறாள், உடனே தனது போலீஸ் நண்பனுக்கு போன் போட்டு தீம் பார்க் பக்கத்திலேயே இருக்கும் டோல்கேட்டில் போலீஸ் சிலரை விட்டு அந்த காரை பிடிக்க சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சுடர் டோல்கேட்டில் இருந்த போலீசை ஏமாற்றிவிட்டு வேலுவிடம் சிக்காமல் தப்பித்துவிடுகிறாள். இதையடுத்து, எழில் ஹாஸ்பிடல் செல்வதற்காக வழியில் இறங்கிக் கொள்ள இவர்கள் வீட்டுக்கு வந்ததும் கனகவல்லி சுடரை பார்த்து என்னாச்சுமா ஒரு மாதிரி இருக்க என்று கேட்க, சுடர் நடந்த விஷயங்களை சொல்ல அவர் சரி நீ போய் ரெஸ்ட் எடுமா, நான் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என அனுப்பி வைக்கிறார்.
காய்ச்சலால் அவதிப்படும் எழில்: அடுத்ததாக, மருத்துவமனையில் இருந்து லேட்டாக வீட்டுக்கு வரும் எழில் குழந்தைகளிடம் அன்பாக பேசிட்டு வெளியே வரும்போது சுடர் ரூமில் ஏதோ முணுங்கல் சத்தம் கேட்டு உள்ளே செல்ல, அவள் காய்ச்சலால் தவித்துக் கொண்டிருக்கிறாள். இதைப்பார்த்து பதறிப்போன எழில் சுடருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











