பசியால் வாடும் குழந்தைகள்..சுடர் செய்த அசத்தலான வேலை.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனா பொட்வால், ஜாஸ்மின், கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கவின் உட்பட குழந்தைகள் அனைவருக்கும் கனகவல்லி சாலட் செய்து தருகிறாள். சாலட் எங்களுக்கு வேண்டாம். பிடிக்கல அப்பா வரதுக்குள்ள வேற ஏதாச்சும் இருந்தா குடுங்க என்று கேட்க, கனகவல்லி சாலட் தான் சாப்பிடணும் என்று சொல்லிவிடுகிறாள்.

இதனால் கவின் மற்றவர்களுடன் சேர்ந்து ஸ்கூல் போனதும் கேண்டினில் சாப்பிடலாம் என்று சொல்ல இதை பின்னாடி இருந்து கேட்டு விடும் எழில் இனிமே உங்களுக்கு பாக்கெட் மணி கிடையாது என்று சொல்லி, வீட்ல எங்கயாச்சும் பணம் வைத்திருந்தால் எல்லாத்தையும் தேடி எடுத்துட்டு வாங்க என்று அதட்டி அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.
பாவம் குழந்தைகள் :இதையடுத்து, இன்றைய எபிசோடில், சுடர் குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது ராமையாவிடம் நேரா வண்டிய வீட்டுக்கு விடுங்க போனதும் மூக்கை பிடிக்க நல்லா சாப்பிடணும் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட ராமையா பாவம் குழந்தைகள், எழில் சார் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ணிட்டாரு. இந்துமதி அம்மா இருக்கும்போது தினமும் குழந்தைகளுக்கு பிடித்தது சமைத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டுட்டு வருவாங்க. அவங்க போனதுக்கு அப்புறம் பசங்களுக்கு பிடிச்சது சாப்பிடறதுக்காக கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவோம். இப்போ மதியம் என்ன பண்ணப் போகிறது என்று தெரியவில்லை, நான் தான் போய் ஏதாவது வாங்கி கொடுக்கணும் என்று சொல்ல சுடர் வருத்தப்படுகிறாள்.
மணக்கும் பிரியாணி: அதன் பிறகு ஸ்கூலுக்கு கொண்டுபோன சாலட் பிடிக்காமல், குழந்தைகள் அனைவரும், அதை குப்பையில் கொட்டி விட்டு பசியில் கிடைக்க அஞ்சலிக்கு அபி தண்ணீர் கொடுத்து பொருத்துக்க என்று சொல்கிறாள். அப்போது அனைவரும் தங்களது அம்மாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். அதன் பிறகு இவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வர வீடு மணக்கும் வகையில் பிரியாணி செய்து வைத்திருக்கிறாள் சுடர். இதைப் பார்த்து கவின் அஞ்சலி காவியா ஆகியோர் பிரியாணி மீது ஆசை கொள்ள அபி சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள்.
பிரியாணி சூப்பர்: நாங்க பிரியாணி சாப்பிட்டாலும் அவ மேல கோபமாகத்தான் இருப்போம் என்று சொல்லி பிரியாணி சாப்பிட்டுவிட்டு பிரியாணி சூப்பர் என்று சொல்லி அபியையும் சாப்பிட தூண்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











