சுடரை வெளியே துரத்த.. கவின் போட்ட நாடகம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனா பொட்வால், ஜாஸ்மின் கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்கூலுக்கு கொண்டுபோன சாலட் பிடிக்காமல், குழந்தைகள் அனைவரும், அதை குப்பையில் கொட்டி விட்டு பசியில் கிடைக்க அஞ்சலிக்கு அபி தண்ணீர் கொடுத்து பொருத்துக்க என்று சொல்கிறாள். அப்போது அனைவரும் தங்களது அம்மாவை நினைத்து வருத்தப்படுகின்றனர்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 5th episode

அதன் பிறகு பள்ளி முடிந்து பசியோடும் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு வீடு மணக்கும் வகையில் பிரியாணி செய்து வைத்திருக்கிறாள் சுடர். இதைப் பார்த்து கவின் அஞ்சலி காவியா ஆகியோர் பிரியாணி மீது ஆசை கொள்ள அபி சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள். பிறகு எப்படியோ அனைவரும் சாப்பிட்டுவிட இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், குழந்தைகள் அனைவரும் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர். பிறகு வீட்டிற்கு வந்த மனோகரி என்ன பிரியாணியை செய்து கொடுத்திருக்க போல என்று சொல்ல, ஆமாம் மேடம் சார் குழந்தைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ணிட்டாரு, இந்த மாதிரி எதாவது செய்தால் தானே குழந்தைகள் மனசுல இடம் பிடிக்க முடியும் என்று சொல்கிறாள். அதைக்கேட்டுவிட்ட அபி இதுக்கு தான் சாப்பிட வேண்டாம்னு சொன்னேன் என்று திட்டுகிறாள்.

நாடகம்போடும் கவின்: அதனை தொடர்ந்து எழில் வீட்டிற்கு வர கவின் வயிறு வலிக்குது என்று டிராமாவை போட எழில் அவனை பரிசோதனை செய்கிறான், இது ஏதோ புட் பாய்சன் மாதிரி தெரியுது என்று சொல்லி என்ன சாப்பிட்ட என்று விசாரிக்க கவின் ஒன்னும் சாப்பிடல என்று சொல்ல எழில் அதட்டி கேட்க கேர் டேக்கர் சமைத்த பிரியாணி என்று சொல்கிறான். இதனால், கடுப்பான எழில், உன்னால குழந்தைகளுக்கு பிரச்சனை மட்டும் தான் வருது என்று சத்தம் போடுகிறான்.

கடுப்பான எழில்: அப்போது அங்கு வரும் கனகவல்லி, பிரியாணி சாப்பிட்டதால் வந்த புட் பாய்சனா இருக்க வாய்ப்பில்லை, ஏன்னா நாங்களும் தான் அந்த பிரியாணியை சாப்பிட்டோம் எங்களுக்கு ஒன்னும் ஆகலையே என்று சொல்ல எழில் சும்மா இருங்கம்மா, நீங்க தான் இவளை வேலைக்கு எடுத்தீங்க என்று கோபப்படுகிறான். எழில் கிளம்பியதும் மற்ற குழந்தைகள் எப்படிடா ஆன் ஸ்பாட்ல நடிக்கிற என்று கேட்க கவின் அவர்களிடம் பேசி கொண்டிருக்க மனோகரி வந்ததும் மீண்டும் நடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போவது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X