சுடரை தேடி வரும் புதிய பிரச்சனை.. அடுத்து நடப்பது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரியாணி சாப்பிட்ட கவின் வயிறு வலிக்குது என்று டிராமாவை போட எழில் அவனை பரிசோதனை செய்கிறான், இது ஏதோ புட் பாய்சன் மாதிரி தெரியுது என்று சொல்லி என்ன சாப்பிட்ட என்று விசாரிக்க கவின் ஒன்னும் சாப்பிடல என்று சொல்ல எழில் அதட்டி கேட்க கேர் டேக்கர் சமைத்த பிரியாணி என்று சொல்கிறான். இதனால், கடுப்பான எழில், உன்னால குழந்தைகளுக்கு பிரச்சனை மட்டும் தான் வருது என்று சத்தம் போடுகிறான். அப்போது அங்கு வரும் கனகவல்லி, பிரியாணி சாப்பிட்டதால் வந்த புட் பாய்சனா இருக்க வாய்ப்பில்லை, ஏன்னா நாங்களும் தான் அந்த பிரியாணியை சாப்பிட்டோம் என்கிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial March 6th episode

இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கவின் வயிறு வலி என்று நாடமாடிக்கொண்டு இருக்க, அங்கு வரும் மனோகரி எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிட்டு இங்க எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருப்பதாக சொல்லி எடுத்து கொடுக்கிறாள். அபிக்கு மட்டும் ஸ்பெஷல் கிப்ட் என்று சொல்லி தனியாக அழைத்துச் சென்று மேக்கப் கிட்டை கொடுக்க இதை யூஸ் பண்ண முடியாது அப்பா திட்டுவாரு என்று அபி சொல்கிறாள். உங்கப்பா பாக்கும்போது யூஸ் பண்ணா தானே பிரச்சனை கார்ல போகும்போது யூஸ் பண்ணு என்று ஐடியா கொடுக்க அபியும் இதை நல்லா ஐடியா என அதை வாங்கி ஸ்கூல் பேக்கில் மறைத்து வைக்கிறாள்.

என் விஷயத்தில் தலையிடாத: பிறகு இவர்கள் காரில் ஸ்கூலுக்கு செல்லும்போது அபி மேக்கப் போட சுடர் என்னது என்று கேட்க இது எல்லாம் நீ கேட்காத, இதெல்லாம் தலையிடாத எங்கம்மாவே இதுக்கெல்லாம் ஓகே சொல்லி இருக்காங்க என்று பொய் சொல்ல அஞ்சலி அம்மா அப்படி சொல்லி இருக்காங்களா பொய் சொல்லாத என கோர்த்து விடுகிறாள். இருந்தாலும் அபி என் விஷயத்தில் தலையிடாத என சுடரிடம் கோபத்தை காட்டுகிறாள்.

அடுத்து என்ன நடக்கும்: அதன் பிறகு வேலு சுடரை தேட, சுடர் ஒரு ஹாஸ்டலில் இருப்பதாக தகவல் தெரிய வருகிறது. அவன் சுடரை தேடி ஹாஸ்டலுக்கு வர சுடர் எழிலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? சுடரும் வேலுவும் சந்தித்துக் கொள்வார்களா? என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X