வெளிநாடு செல்ல ரெடியான சுடர்.. அஞ்சலி வரைந்த ஓவியம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரசவ வலியில் துடிக்க அவளுடைய கணவன் வராமல் இருக்க நீ வந்தா தான் ஆபரேஷன் நடக்கும் என சொல்லிவிடுகிறான் எழில். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த கணவனை ஓங்கி அடித்துவிட்டு, நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ண என திட்டுகிறான்.

இதையடுத்து தமிழ் சாப்பாடு கொண்டு வர எழில் நீ எதுக்கு வந்த என்று கேட்க ராமையா இல்லாததால் சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்கிறாள். ஆனால் எழில் நீ இங்க எல்லாம் வர கூடாது என திட்டி லிப்டுக்குள் செல்ல சுடரும் லிப்டுக்குள் செல்ல, திடீரென்று லிஃப்ட் ஆஃப் ஆக எழில் மனோகரிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் கூட தமிழ் இருப்பதை தெரிந்து பயங்கர கடுப்பாகிறாள். வேகவேகமாக லிப்டை ரெடி பண்ண லிஃப்ட் ஆன் ஆனதும் கேட்ட சத்தத்திற்கு பயந்து தமிழ் எழிலை கட்டி பிடித்துக்கொள்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில், அஞ்சலி ஏதோ வரைந்து கொண்டிருக்க அபி என்ன வரைந்த என்று கேட்க அஞ்சலி தனது குடும்பத்தை வரைந்த போட்டோவை காட்டுகிறாள். அதில் எழில் மட்டும் மிஸ் ஆக அப்பா எங்கே என்று கேட்க அஞ்சலி மறந்துட்டேன் என சொல்கிறாள். மற்றொரு டிராயிங் வரைந்தியே அது எங்கே என்று கேட்க அதை அப்புறம் காட்டுறேன், இன்னும் முழுசா முடிக்கல என சொல்கிறாள். இதைத்தொடர்ந்து துரை இங்கே வீட்டுக்கு வந்து கதவை தட்டி சுடர் பற்றி விசாரிக்க கனகவல்லி அப்படி யாரும் இல்லை என்று சொல்ல சுடர் ஓடி ஒளிந்து கொள்கிறாள்.

அஞ்சலி வரைந்த ஓவியம்: உடனே டிராவல் ஏஜென்சிக்கு போன் செய்து கூடிய சீக்கிரம் வெளிநாடு பாக்கணும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று பேசிக் கொண்டிருக்க கீழே ஒரு பேப்பர் கிடப்பதை எடுத்து பார்க்கிறாள். அஞ்சலி அந்த பேப்பரில் குடும்பத் போட்டோவுடன் சுடரின் போட்டோவையும் வரைந்திருக்க அதை பார்த்து சுடர் பீல் ஆகிறாள். அஞ்சலி என்னை இந்த அளவுக்கு நம்புறாளே என்ன செய்வது என யோசிக்கிறாள். அடுத்ததாக எழில் இதுவும் அவனும் ஒரே கலராக ரெட் கலரில் டிரஸ் போட்டு அழகு பார்த்ததை நினைத்து பார்க்கிறான்.
கடுப்பான எழில்: எழில் இந்த வன் ரெட் கலர் புடவையை எடுத்து வெளியே வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று இருக்கும் நேரத்தில் அங்கு வரும் மனோகரி இந்த புடவையை நான் கட்டிக்கிட்டா எழிலுக்கு என்னை பிடிக்கும் என்று கணக்கு போட வெளியே வந்த ஏழில் இதை பார்த்து என்னுடைய அனுமதியில்லாமல் என் இந்துமதியோட எந்த பொருளையும் நீ தொடக்கூடாது என கோபப்படுகிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











