எழிலை கொல்ல துணிந்த வேலு.. இனி நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் சுடரை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி சுடர் வராமல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க கனகவல்லி அவ உன் கூட தானே வந்தா, அதுக்கப்புறம் வீட்டிற்கே வரலையே என்று சொல்ல எழில் சுடரை இறக்கி விட்ட இடத்திற்கு தேடி வருகிறான். சுடர் அங்கு இல்லாததால் அவளை தேடி அலைய சுடர் பிச்சைகார தாத்தா மற்றும் அங்கு இருப்பவர்களிடம் எழிலை பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லி கொண்டிருக்கிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial May 13th today episode

சுடரை தேடி வரும் எழில்: எழில் அங்கு வந்ததும் இவர் தான் அந்த மிலிட்டரி காரரா என்று கலாய்க்கின்றனர், பிச்சைக்காரர் தாத்தா அந்த பொண்ணு நல்ல பொண்ணு அவளை விட்டுடாதே என்று சொல்லி அனுப்பி வைக்கிறார், அடுத்து எழில் சுடரை கூட்டி கொண்டு கிளம்ப காரில் ஏறியதும் உனக்கு பெர்சனலா எதுவும் வச்சிக்க தெரியாதா என்று கோபப்படுகிறான்.

அடுத்து வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து கொண்டு இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாத, அப்படி போனா என்னையும் கூட்டிட்டு போ என்று சொல்கிறாள்.இதையடுத்து மறுநாள் சுடர் வீட்டை துடைத்து கொண்டிருக்க எழில் ஹாஸ்பிடல் கிளம்ப காலில் இடித்து கொள்ள சுடர் தண்ணீர் கொண்டு வரேன் என்று சொல்ல எழில் வேண்டாம் என்று கிளம்புகிறான்.

போனில் மிரட்டிய வேலு: கொஞ்ச நேரத்தில் புதிய நம்பரில் இருந்து சுடருக்கு போன் வருகிறது. அதில் பேசும் வேலு, என்ன அந்த எழில் வீட்டுக்குள்ள இருந்தா உன்னை ஒன்னும் பண்ணமுடியாதா, முதலில் அந்த எழிலை கொல்றேன். அப்புறம் உன்னை வீடு புகுந்து தூக்குறேன். என் மேல கைய வெச்சதுக்கு அவனை மட்டும் இல்ல, அவன் குடும்பத்தையே தூக்குகிறேன். இப்போ அவன் ஹாஸ்பிடல் தானே போயிட்டு இருக்கான், அப்படியே அவனை கொல்ல போறேன் என்று அதிர்ச்சி கொடுக்க, சுடர் எழிலுக்கு போன் செய்ய அவன், போனை எடுக்காத நிலையில் ஆட்டோவில் எழிலை காப்பாற்றுவதாக வேகவேகமாக செல்கிறாள்.

மறுபக்கம் காரில் எழிலை ஒரு வேன் மோதுவதற்காக பின்தொடர்ந்து செல்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X