இந்துவை போட்டு தள்ளிய மனோகரி.. ரகசியத்தை உடைத்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் கார் மீது வேனை மோதி விபத்தை ஏற்படுத்த, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி ஆச்சு, அவன் எனக்கு போன் பண்ணி இருந்தான் என்று அழுகிறாள். விஷயம் தெரிந்து ஹாஸ்பிடல் வந்த மனோகரி உன்னால் தான் எழிலுக்கு இந்த நிலைமை, உன்ன சும்மா விட மாட்டேன் என்று சத்தம் போடுகிறாள்.
அதையடுத்து மனோகரி வேலுவை சந்தித்து நீ எதுக்கு எழிலை கொல்ல பார்க்குற, அந்த சுடரை என்ன வேணா பண்ணிக்கோ, ஆனால் என் எழில் மேல கையை வச்சா உன்ன சுட்டு தள்ளிடுவேன் என்று துப்பாக்கி முனையில் மிரட்டுகிறாள். வேலு உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா என்று அவள் குறித்து பல அதிர்ச்சி விஷயத்தை சொல்லுகிறான்.இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், பிளாஷ்பேக்கில் எழில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த மனோகரி மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள். மனோகரியை பார்த்ததும் எழில் சந்தோஷப்படுகிறான். இவ்வளவு நாளா எங்க போய்ட்ட என்று கேட்டு விசாரிக்கிறான்.
பிறகு இந்து அவளுக்காக காபி போட போக பின்னாடியே சென்ற எழில் இந்துவுடன் கிச்சனில் வைத்து ரொமான்ஸ் செய்ய அதை பார்த்த மனோகரி கடுப்பாகிறாள். பிறகு எழில் மனோகரிடம் நான் ரொம்ப லக்கி எனக்கு பிடிச்ச மனைவியும் என் கூட இருக்கா, எப்பவும் என்னை புரிஞ்சிட்டு நடக்குற என் ப்ரண்ட், நீயும் என்கூட இருக்க, எப்பவும் என் கூடவே இரு என்று பேசி கொண்டிருக்க இந்து, எழிலை கூப்பிட அவன் உள்ளே சென்று விடுகிறான்.
இந்துவை கொல்ல பிளான் : அதன் பிறகு மைண்ட் வாய்ஸில் இனிமே உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லும் மனோகரி அடியாளுக்கு போனை போட்டு இந்துவை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறாள். மறுநாள் இந்துவுக்கு போன் கால் வருகிறது. அதில் ஆசிரமத்தில் இருந்து பேசுவதாகவும் உங்க அப்பா அம்மா யாரென்று தெரிந்து விட்டது, நீங்க ஆசிரமத்துக்கு வாங்க என்று போனை வைக்கின்றனர்.
அம்மா அப்பா பற்றி தெரிந்து விட்டதாக கிடைத்த தகவலால் இந்து சந்தோசமாக கிளம்ப, வீட்டில் யாரும் இல்லாமல் மனோகரி மட்டும் இருக்க அவளிடம் சொல்லி விட்டு கிளம்பியதும் இந்து செல்லும் காரை லாரி ஒன்று துரத்தி கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











