எழிலை தாங்கிப்பிடித்த சுடர்.. ரொமான்ஸ் அள்ளுதே.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஆசிரமத்திற்கு சென்ற இந்துவை பாலோ பண்ணும் லாரி கார் மீது மோதி ஏற்படும் விபத்தில் இந்து உயிரிழக்கிறாள். வேலு இந்த பிளாஷ்கட் கதையை சொல்லி மனோகரி பயமுறுத்துகிறார்.
இதைக்கேட்டு பயந்து நடுங்குவது போல பேசும் மனோகரி, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிடாத என்று கெஞ்சுவது போல் கெஞ்சி கடைசியில் சிரித்து, உன்னால் என்ன ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டு, ஸ்டேஷனில் வைத்து ஒருவனை கொன்ற விஷயத்தை சொல்லி வேலுவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். உனக்கு தேவை சுடர், எனக்கு தேவை எழில், நான் சொல்ற மாதிரி செய்தால் சுடரும் உனக்கு கிடைப்பா கூடவே நாலு கோடி ரூபாய் பணமும் கிடைக்கும் என்று டீல் பேசி வேலுவை தனது வழிக்கு கொண்டு வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் எழிலுக்கு, கவினிடம் மாத்திரை கொடுத்து விட்டு, பின்னாடியே சுடர் ரூமுக்கு வருகிறாள். கவின் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட சுடர், யாரோ என்னை யாருமே பார்த்துக்க மாட்டாங்கனு சொன்னாங்க, ஆனால் என் புள்ளைங்க என்னை பார்த்துக்கறாங்க என்று பேசி சுடரை வெறுப்பேற்றுகிறான். அதன் பிறகு அஞ்சலியிடம் உனக்கு சாக்லேட் தரேன் நான் சொல்றதை செய்யறீயா என்று கேட்க, அவள் முடியாது நீ அப்பா ரூமுக்கு போக சொல்லுவ என்று மறுக்க சுடர் அவளிடம் கெஞ்சி சம்மதிக்க வைக்கிறாள்.
எல்லாம் அவ வேலையா: அதன் பிறகு அஞ்சலி எழில் ரூமுக்குபோக, அப்போது உணர்ச்சி வசப்படும் எழில், அவன் எனக்காக நீங்க இதையெல்லாம் செய்வதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு என்று சொல்கிறான். அப்போது, சுடர் தான் இங்க அனுப்புனா என்று சொல்ல, எழில் டென்ஷன் ஆகிறான். அப்போது, செல்வி பால் கொண்டு வர நீயா கொண்டு வந்தியா என்று கேட்க, இல்ல சார் சுடர் தான் கொண்டு வந்தாங்க என்று சொன்னதும் கோபப்படுகிறான்.
சுடரை திட்டும் எழில்: அது முடிந்ததும் எழில் அவனாக எழுந்து நிற்க முயற்சி செய்கிறான். ஆனால், காலில் அடிபட்டு இருப்பதால், ஸ்லிப்பாகி விழ போக சுடர் அவனை தாங்கி பிடிக்கிறாள். எழில் சுடரை எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறான். வேலு விஷயம் முன்னாடியே தெரிந்து இருந்தால் உங்ககிட்ட சொல்லி இருப்பேன், தெரிந்த உடனே தான் உங்களை காப்பாற்ற ஓடி வந்தேன் என்று சொல்ல எழில் நீ என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











