கதறி அழும் தமிழ்... காட்டிக்கொடுத்த குறியீடு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அபி மற்றும் கவின் இருவரும் தமிழின் போட்டோவை வைத்துக்கொண்டு ரோடு ரோடாக அலைகின்றனர். மனோகரி வேலுவுக்கு போன் செய்து தமிழைத் தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறாள். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான். தமிழின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு, ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான்.
மறுபக்கம் கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் தமிழ், கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வருகிறாள். அப்போது, அபி அஞ்சலி, நீ வந்தாதான் கண் முழிப்பா என்று டாக்டர் சொல்லிட்டாரு என்ற விஷயத்தை சொன்னதும் தமிழ் அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து, வேலு ஒழுங்கு கல்யாணத்துக்கு ஒத்துக்க இல்லனா அவ்வளவுதான் என்று அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட அவள் வேறு வழி இல்லாமல் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கனகவல்லிக்கு வரும் போனில் தமிழை வேலு என்பவர் கடத்தி கட்டாய திருமணம் செய்ய இருப்பதாக செய்தி தருகிறார். இதை கனகவல்லி பதற்றத்துடன் எழிலிடம் சொல்ல, நீங்க ஹாஸ்பிடலில் அஞ்சலியை பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான். ஆனால், வீட்டில் அபி, கவின் இருவருமே இல்லாததால் எழில் பதற்றம் அடைய அங்கு கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான்.
கதவில் மார்க்: இதையடுத்து, அபி மற்றும் கவினைத் தேடி அலைகிறார். அந்த ஊரில் இருப்பவர்களிடம் போட்டோவை காட்டி குழந்தைகள் இங்கே வந்தாங்களா என்று விசாரித்துக்கொண்டு இருக்க, அனைவரும் இல்லை என்று சொல்கின்றனர். அப்போது, ஒரு வீட்டின் கதவில் மார்க்கரில் கே என்று எழுதி இருப்பதை பார்த்து அந்த வீட்டிற்கு செல்கிறான்.
கதறி அழும் தமிழ்: இப்படி எழில் ஒரு பக்கம் குழந்தைகளை தேடி அலைந்து கொண்டு இருக்க வேலு, குழந்தைகளை கட்டிப்போட்டுவிட்டு, தமிழ் நீ லேட் பண்ண பண்ண, அங்கு நீ பாசமா வளர்த்த அஞ்சலி உயிர் தான் போகும், போ சீக்கிரம் மணமேடைக்கு போ என்று சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாத தமிழ், கதறி அழுதுக்கொண்டு மண மேடையில் அமர, கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்று அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











