உன் சாவுக்கு நான் தான் காரணம்.. போட்டோ முன் கதறும் எழில்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் எழிலுக்கு, கவினிடம் மாத்திரை கொடுத்து விட்டு, பின்னாடியே சுடர் ரூமுக்கு வருகிறாள். கவின் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட சுடர், யாரோ என்னை யாருமே பார்த்துக்க மாட்டாங்கனு சொன்னாங்க, ஆனால் என் புள்ளைங்க என்னை பார்த்துக்கறாங்க என்று பேசி சுடரை வெறுப்பேற்றுகிறான்.
இதையடுத்து எழில் எழுந்து நிற்க முயற்சி செய்கிறான். ஆனால், காலில் அடிபட்டு இருப்பதால், ஸ்லிப்பாகி விழ போக சுடர் அவனை தாங்கி பிடிக்கிறாள். எழில் சுடரை எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறான். வேலு விஷயம் முன்னாடியே தெரிந்து இருந்தால் உங்ககிட்ட சொல்லி இருப்பேன், தெரிந்த உடனே தான் உங்களை காப்பாற்ற ஓடி வந்தேன் என்று சொல்ல எழில் நீ என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சுடரை திட்டும் எழில்: இதையடுத்து நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் காலில் இருக்கும் கட்டுகளை அவிழ்க்க அதை பார்த்து பதறிய சுடர் ஏன் என்னாச்சு? எதுக்கு கட்டை அவிழ்க்கறீங்க என்று கேள்வி கேட்க, எழில் அவளை திட்டி வெளியே போக சொல்ல அந்த நேரம் பார்த்து அங்கு மனோகரி வருகிறாள். எழிலிடம் சுடர் திட்டு வாங்குவதை பார்த்து ரசிக்கிறாள். எழிலுடன் சேர்ந்து அவளும் சுடரை திட்டி சந்தோசப்பட்டு கொள்கிறாள்.
வருத்தத்தில் கனகவல்லி: சுடர் வருத்தமாக கீழே வர அங்கு கனகவல்லி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்னாச்சும்மா என்று கேட்க நாளைக்கு ஒரு முக்கியமான நாள் இந்துவோட நினைவு நாள் என்று வருத்தப்படுகிறாள். சுடர் எனக்கும் நாளைக்கு ஒரு முக்கியமான நாள் விசா கிடைக்க போகும் நாள் என்று சொல்கிறாள். கனகவல்லி இந்துவுக்கு அப்புறமா நீ தான் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்ட, இப்போ நீயும் போய்ட்டா குழந்தைகள் கஷ்டப்படுவாங்க என்று வருத்தப்படுகிறாள், இருந்தாலும் நீயும் இப்படியே இருக்க முடியாதுல என்று சொல்லி மனசை தேற்றி கொள்கிறாள்.

அதனையடுத்து சுடர் இந்துவின் தாலியை எடுத்து வைத்து கொண்டு இது என் கைக்கு கிடைச்சு 1 வருஷம் ஆகிடுச்சு, இன்னும் சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்க முடியல என்று வருத்தப்படுகிறாள். இதையடுத்து மறுபக்கம், எழில், இந்து போட்டோ முன்னாடி நின்று என்னை மன்னிச்சுடு இந்து... மன்னிச்சுடு என்று அழுது கொண்டிருக்கிறான். இன்னையோடு உன்னை நேர்ல பார்த்து 365 நாள் ஆச்சு. என்னை மட்டும் இந்நிலைமையில் விட்டுவிட்டு நீ மட்டும் சந்தோஷமா போய்ட்ட.

அன்னைக்கு நான் மட்டும் உன்கூட வந்திருந்தா இப்படி நடந்திருக்காது என்று கலங்குகிறான். அப்படியே பிளாஷ்கட் ஒபெனாகிறது. அதில் இந்து போன் செய்து எழிலை தன்னுடன் அழைக்க, அவன் வேலை இருப்பதாக சொல்லி வர மறுத்து விட்ட விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











