இந்துவின் நினைவு நாள்.. தாயை தேடி வரும் குழந்தைகள்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், கனகவல்லி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்னாச்சும்மா என்று கேட்கிறாள். நாளைக்கு இந்துவோட நினைவு நாள், அவள் இறந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது என்று வருத்தப்படுகிறாள். சுடர் எனக்கும் நாளைக்கு ஒரு முக்கியமான நாள் விசா கிடைக்க போகும் நாள் என்று சொல்கிறாள். கனகவல்லி இந்துவுக்கு அப்புறமா நீ தான் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்ட, இப்போ நீயும் போய்ட்டா குழந்தைகள் கஷ்டப்படுவாங்க என்று வருத்தப்படுகிறாள், இருந்தாலும் நீயும் இப்படியே இருக்க முடியாதுல என்று சொல்லி மனசை தேற்றி கொள்கிறாள்.
மறுபக்கம், எழில், இந்து போட்டோ முன்னாடி நின்று என்னை மன்னிச்சுடு இந்து... மன்னிச்சுடு என்று அழுது கொண்டிருக்கிறான். இன்னையோடு உன்னை நேர்ல பார்த்து 365 நாள் ஆச்சு. என்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு நீ மட்டும் சந்தோஷமா போய்ட்ட என்று அழுதுக் கொண்டு இருக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

வருத்தப்படும் சுடர்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், சுடர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக கிளம்புகிறாள். கனகவல்லியிடம் சாரி அம்மா, என்னால இன்னைக்கு இங்க இருக்க முடியல என்று சொல்லி வருத்தப்பட அவள் நீ என்னமா பண்ணுவ, நீ நினைக்கிறதெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்று ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறாள். இதே நேரத்தில் ஹாலில் இந்துவின் போட்டோவிற்கு அலங்காரம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்துவின் சமாதி: அடுத்து ரூமில் குழந்தைகள் நாலு பேரும் அம்மா இருந்து இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும், அம்மாவை பார்க்கணும் போலவே இருக்கு என்று பேசி கொள்ள கவின் அம்மாவை தான் பார்க்க முடியாது. ஆனால் அம்மா இருக்க இடத்துக்கு போக முடியும்ல என்று சொல்லி சமாதிக்கு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.
வீட்ல யாருமே இல்லையே எப்படி போறது என்று எல்லாரும் கேள்வி கேட்க சமாதி இருக்க இடம் தான் நமக்கு தெரியுமே நாமளே போகலாம் என்று சொல்ல எல்லாரும் கீழே வர எழில் இந்துவை நினைத்து குடித்து கொண்டிருக்கிறான். கனகவல்லி பூஜையறையில் இருக்க, குழந்தைகள் யாருக்கும் தெரியாமல் சமாதிக்கு கிளம்பி வருகின்றனர். சமாதிக்கு வந்த இவர்கள் அங்கே செடி எல்லாம் முளைத்து கிடப்பதை பார்த்து அதை சுத்தம் செய்ய தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











