மீண்டும் அவதாரம் எடுக்கும் இந்துவின் ஆத்மா.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்காக கனகவல்லி இந்துவின் போட்டோவிற்கு அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் எழில் இந்துவை நினைத்து குடித்துக்கொண்டு இருக்க, குழந்தைகள் நாலு பேரும் அம்மா இருந்து இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும், அம்மாவை பார்க்கணும் போலவே இருக்கு என்று பேசி கொள்ள கவின் அம்மாவை பார்க்க தான் முடியாது. ஆனால் அம்மா இருக்கும் இடத்துக்கு போக முடியும்ல என்று சொல்லி சமாதிக்கு போகின்றனர்.

இந்துவின் சமாதிக்கு வந்த குழந்தைகள் அங்கே செடி எல்லாம் முளைத்து கிடப்பதை பார்த்து அதை சுத்தம் செய்து கொண்டு இருக்க. அந்த இடத்தில், ரௌடிகள், அஞ்சலியை பிடித்து வைத்து மற்ற குழந்தைகளை மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Zee tamil television Ninaithen Vandhai serial May 23rd today episode

இதையடுத்து இன்றைய எபிசோடில், குழந்தைகளுக்காக மீண்டும் அவதாரம் எடுத்து இந்து வருகிறாள். அவள், குழந்தைகளை கடத்தியவர்களை அடித்து துவைத்துவிட இவை அனைத்தையும் பார்த்து குழந்தைகள் ஆச்சரியப்படுகின்றனர். மறுபக்கம் வீட்டில் கனகவல்லி குழந்தைகளை காணவில்லை என்று பதறிக்கொண்டு இருக்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் போது, நான்கு பேரும் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர், கனகவல்லி சொல்லாமல் எங்க போனீங்க என்று கேள்வி கேட்டு சரி வாங்க அம்மாவை கும்பிட்டுக்கோங்க என்று சாமி கும்பிட சொல்கிறாள்.

வீட்டிற்குள் வந்த இந்துவின் ஆவி: இதனை தொடர்ந்து, இந்து ஆவியாக வீட்டிற்குள் வருகிறாள். கனகவல்லி சோபாவில் கண் மூடி சாய்ந்திருக்க, அத்தை நான் வந்துட்டேன். இனிமேல் நீங்க நிம்மதியா இருக்கலாம் என்று சொல்கிறாள். குழந்தைங்க எங்க போனாங்கனு தெரியுமா? ஏன் அத்தை அவங்களை கவனிக்காமல் இப்படி விட்டீங்க என்று கேள்வி கேட்க கனகவல்லி தனக்கு தானே ஏதோ புலம்பி கொள்கிறாள். இதை பார்த்த இந்து நான் பேசுறது கேட்குதா என்று கேட்டுக்கொண்ட நிற்க, கனவல்லி எழுந்து சென்றுவிடுகிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial May 23rd today episode

கதறி அழும் இந்து: பின் எழில் ரூமுக்கு வரும் இந்துவின் ஆவி, போட்டோவை பார்த்து குடித்தபடி இருக்கும் எழிலைப் பார்த்து வருத்தப்படுகிறாள். எழில் அழாதீங்க நான் வந்துட்டேன், நான் இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே கதறி அழுகிறாள். எழிலும் போட்டோவை பார்த்து புலம்ப, இந்து தான் பேசுவது கேட்குதா என்று கேட்க, இந்துவை கட்டி அணைப்பது போல வரும், எழில் போட்டோ அருகே சென்று நின்று பீல் பண்ண நான் பேசுறது இவங்களுக்கு கேக்கல என்று தெரிந்து, இந்து கண்ணீர் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X