சுடர் கண்ணுக்கு தெரிந்த இந்து.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், முதல் நினைவு நாளில் வீட்டுக்கு வரும் இந்துவின் ஆவி, தனது போட்டோவை பார்த்துக்கொண்ட குடித்துக்கொண்டு இருக்கும் எழிலைப்பார்த்து வருத்தப்படுகிறாள். எழில் அழாதீங்க நான் வந்துட்டேன், நான் இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே கதறி அழுகிறாள். ஆனால், அது எழில்காதில் விழவில்லை.
இதையடுத்து குழந்தைகளின்அறைக்கு செல்லும் இந்துவின் ஆவி, அஞ்சலி அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து, வருத்தப்பட்டு, அஞ்சலி கட்டிபிடிக்க பார்க்கிறாள், ஆனால், ஆவி என்பதால் அஞ்சலியின் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால், மனம் உடைந்து போன இந்து, வீட்டு வாசலில் அமர்ந்து இருக்க, அப்போது சுடர், வர, சுடரின் கண்ணுக்கு மட்டும் இந்து நன்றாக தெரிய,நீங்க யார் இந்துவின் தோழியா வாங்க என்று வீட்டுக்குள் அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், சுடர் உள்ளே நுழைந்ததும் கனகவல்லி, சுடரை பார்த்து விட்டு வா மா, வேலை எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்கிறாள். நீ சாப்பிடு சுடர் நான் அப்புறம் சாப்பிடுறேன். நீங்களே அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி போய் இருக்கீங்க, போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள். பிறகு, இந்துவை வீட்டுக்குள் அழைத்து வந்தது நினைவுக்கு வர, ஐயோ உங்களை மறந்துட்டேனே, இருங்க அம்மாவை கூப்பிடுறேன் என்று சொல்கிறான். ஆனால், இந்து சுடரை வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள்.
இதனையடுத்து இந்து வீட்டில் தனது போட்டோவுக்கு பூஜை நடத்திருப்பதை பார்க்கிறாள், சுடர் இந்த போட்டோவை பார்த்தா நான் பேய் என்று தெரிந்துவிடுமே என்று பயப்பட, அந்த நேரத்தில் அங்கு வந்த மனோகரி அந்த போட்டோவை பார்த்ததும் அதான் பூஜை முடிஞ்சிடுச்சுல இந்த போட்டோவை எடுத்திட்டு போய், மேலே ரூம்ல வைங்க என்றாள்.
பயந்து கத்திய இந்து: அடுத்து, மறுபக்கம், சுடர் இந்துவிடம் நீங்க ஜூஸ் குடிச்சிட்டு தான் போகணும் என்று சொல்லி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, நான் மேங்கோ ஜூசை குடிக்க மாட்டேன் என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள், இதையடுத்து,ப க்கத்துக்கு வீட்டிற்குள் நுழையும் இந்து, அங்கு தீபா என்ற பெண் சோபாவில் உட்கார்ந்து பேஸ் மாஸ்க் போட்டு கொண்டிருப்பதை பார்த்து இந்து பயந்து கத்துகிறாள். இந்து கத்திய சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்க்கும் தீபா, யாரும் இல்லாததால் பிரம்மை என நினைத்து கொள்கிறாள்.
பேயுடன் டீலிங்: அடுத்து தீபாவுக்கு ஒரு போன் கால் வர உடனே மேக்கப்பை கலைத்து நைட்டிக்கு மாறி வீடியோ காலில் பேச அவள் அந்த வீட்டு வேலைக்காரி என்பது தெரிய வருகிறது. வாடகைக்கு வீடு கேட்பவர்களிடம் எல்லாம் பேய் இருப்பதாக சொல்லி தட்டி கழித்து இவளே இந்த வீட்டில் தங்கி இருப்பதும் இந்துவிற்கு தெரிய வருகிறது. இதனால் இந்து தீபாவுக்கு பயம் காட்டி நான் இந்த வீட்டில் தான் இருப்பேன், நீ எதாவது செய்யணும்னு நினைச்ச நீ பண்ற வேலையை உன் ஓனரிடம் போட்டு கொடுத்துடுவேன் என்று மிரட்ட தீபா பயந்து இந்துவின் டீலுக்கு சம்மதம் சொல்கிறாள். மறுநாள் எழில் சுடர் சமைத்தம் சாப்பாட்டை சாப்பிடாமல் கோபத்துடன் எழுந்து செல்ல இதை பார்த்து இந்து கவலைப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











