கணவருக்காக இந்து எடுத்த முடிவு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், யார் கண்ணுக்கும் தெரியாத இந்து, சுடர் கண்ணுக்கு மட்டும் தெரிகிறாள். இதையடுத்து, இந்துவை வீட்டிற்கு அழைத்து செல்லும் சுடர், நீங்க ஜூஸ் குடிச்சிட்டு தான் போகணும் என்று சொல்லி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, நான் மேங்கோ ஜூசை குடிக்க மாட்டேன் என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள் இந்து.
இதையடுத்து, பக்கத்துக்கு வீட்டிற்குள் நுழையும் இந்து, அங்கு தீபா என்ற பெண் வீட்டிற்கு செல்கிறான். அந்த வீட்டில் வேலை செய்யும் அந்த பெண், வீட்டு ஓனரிடம் இந்த வீட்டில் பேய் இருப்பதாக சொல்லி நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாள். இதை தெரிந்து கொண்ட இந்துவின் ஆவி, இதனால் இந்து, தீபாவுக்கு பயம் காட்டி அந்த வீட்டிலேயே தங்கி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், எழில், எல்லாத்துக்கும் கோபப்படுறாரு.. இனிமே நாமும் சார் சார்னு அவர் பின்னாடியே தொங்கிட்டு இருக்க கூடாது என்று கோபப்படுகிறாள். இதனையடுத்து இதையெல்லாம் பார்த்த இந்து எழில் சாப்பிடாமல் போனதை நினைத்து பீல் பண்ணுவதோடு சுடருக்கு, எழிலை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்று தெரியல என்று, சுடருக்கு சமைக்க சொல்லி கொடுக்க முடிவெடுக்கிறாள்.
சுடர் செய்த பிரியாணி: இதையடுத்து, இந்து, நீ வா நான் சொல்லி தரேன், நான் சொல்றதை கேட்டு நீ அப்படியே சமைத்தால் போதும், சாப்பாடு சூப்பரா இருக்கும் என்று சொல்கிறாள். இதையடுத்து, சுடர், பக்கத்து வீட்டு பெண் தீபாவை துணைக்கு வைத்துக்கொண்டு இந்து சொல்லியது போல, அனைத்து பொருட்களையும் அளவாக போட்டு சமைத்து முடிக்கிறாள்.
சூப்பர் பிரியாணி: சமைத்து முடித்த பிறகு பசங்களை, எப்படி சாப்பிட கூப்பிடுவது என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் கவின், அந்த இடத்திற்கு வர, அவனை சாப்பிட அழைக்கிறாள். அப்போது கவின், நீ சமைத்ததை நான் சாப்பிட மாட்டேன் என்று மேலே செல்கிறான். அப்போது சுடர் அவனின் ஆசையை தூண்டும் வகையில், ஹாட் பாக்ஸின் மூடியை திறக்க, பிரியாணி வாசனையை வைத்து சாப்பிட வருகிறான். கவினால், மற்ற குழந்தைகளும் சாப்பிட வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











