இந்துவாக மாறிய சுடர்.. கண் கலங்கிய எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், பக்கத்து வீட்டு பெண் தீபாவை துணைக்கு வைத்துக்கொண்டு இந்து சொல்லியது போல பிரியாணி செய்கிறாள் சுடர்.
பிறகு சமைத்து முடித்த பிறகு பசங்களை, எப்படி சாப்பிட கூப்பிடுவது என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் கவின், அந்த இடத்திற்கு வர, அவனை சாப்பிட அழைக்கிறாள். கவின் பிரியாணியை சாப்பிட்டு சூப்பரா இருக்கு என்று செல்ல, மற்ற குழந்தைகளும் சாப்பிட வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அம்மா சமைத்த பிரியாணி போல: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், அபி பிரியாணியை சாப்பிட்டு பார்த்து அப்படியே அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்ல மற்றவர்களும் சாப்பிட்டு பார்த்து ஆமாம் அப்படி தான் இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து கனகவல்லி வர அவளும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு, அப்படியே இந்து சமைத்த மாதிரியே இருக்கு, நீ எப்படி சமைப்பனு எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இது எப்படி இந்து சமைத்த மாதிரி வந்தது? யார் சமைத்தது என்று கேட்க சுடர் நான் தான் சமைத்தேன் என்று சொல்கிறாள்.
பிரியாணியை ரசித்து சாப்பிடும் எழில்: அடுத்து எழில் கீழே வர அவனையும் இந்து சமைத்தது போலவே இருப்பதாக சொல்லி சாப்பிட கூப்பிட சுடர் சமைத்தது என்று தெரிந்ததும் வேண்டாம் என்று மேலே சென்று விடுகிறான். இந்து சமைத்தது போல் இருப்பதாக எல்லாரும் சொன்னதால் எல்லாரும் தூங்கிய பிறகு வந்து சாப்பிடும் எழில் இந்துவை நினைத்து கண் கலங்க எழில் சாப்பிடுவதை பார்த்து இந்து சந்தோசப்படுகிறாள்.
மனோகரிக்கு விருது: அடுத்து பிள்ளைகள் எல்லாரும் ஸ்கூலில் நடக்கும் காம்படீஷனில் கலந்து கொள்ள போவதாக சொல்கின்றனர், ஆனால் அப்பாவுக்கு தெரிந்தா திட்டுவாரு என்றும் பயப்பட சுடர் நீங்க கலந்துக்கோங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு பிள்ளைகள் கீழே வர எழிலும் ஹாஸ்பிடல் கிளம்பி வர மனோகரி இன்னைக்கு உனக்கு சிறந்த டாக்டர் விருது தரப்போறாங்க, அதுக்கு நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட கனகவல்லி பிள்ளைகளையும் கூட்டி செல்ல சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











