சுடரை மன்னித்த எழில்.. அதிர்ச்சியில் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அபி மற்றும் கவின் தமிழைத் தேடி கொண்டிருந்த போது, வேலு குழந்தைகளை கட்டிப்போட்டுவிட்டு, தமிழ் நீ லேட் பண்ண பண்ண, அங்கு நீ பாசமா வளர்த்த அஞ்சலி உயிர் தான் போகும், போ சீக்கிரம் மணமேடைக்கு போ என்று சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாத தமிழ், கதறி அழுதுக்கொண்டு மண மேடையில் அமர, கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
மறுபக்கம் எழில் குழந்தைகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறான். போட்டோவை காட்டி குழந்தைகள் இங்கே வந்தாங்களா என்று விசாரித்துக்கொண்டு இருக்க, அனைவரும் இல்லை என்று சொல்கின்றனர். அப்போது, ஒரு வீட்டின் கதவில் மார்க்கரில் கே என்று எழுதி இருப்பதை பார்த்து அந்த வீட்டிற்கு செல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அடித்து உதைத்த எழில்: இதையடுத்து, நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், மார்க்கரில் எழுதி இருந்த கே எழுத்தைப் பார்த்துவிட்டு, எழில் அந்த வீட்டின் கதவை தட்டி, யாரும் வராததால் திரும்பிபோக முடிவு செய்கிறான். திடீரென எழிலுக்கு சந்தேகம் வர, சாவி போடும் ஓட்டையில் பார்க்க, அதில் அபி மற்றும் கவின் கட்டிப்போட்டு இருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து குழந்தைகளை காப்பாற்றுகிறான்.
கட்டாய திருமணம்: பிறகு இருவரும் தமிழை வேலு கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யப்போகிறான் என்று அபி சொல்ல, அது நமக்கு வேண்டாத வேலை, நாம வீட்டிற்கு போகலாம் என்று சொல்ல, அபி வீட்டிற்கு வந்தா தமிழ் கூடத்தான் வருவேன் என்று அடம்பிடிக்கிறாள். இதனால், எழில் கோவப்பட்டு அபியை திட்ட, அப்பா, தமிழுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. வேலு என்னையும் தம்பியையும் கடத்தி வெச்சு மிரட்டித்தான் திருமணத்திற்கு தமிழை சம்மதிக்க வெச்சான் என்று சொல்கிறாள். வியத்தை தெரிந்து கொண்ட எழில், கடைசி நொடியில் வந்து கல்யாணத்தை நிறுத்தி தமிழையும் காப்பாற்றுகிறான்.
கடுப்பான மனோகரி : இதையடுத்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஹாஸ்பிடல் வருகின்றனர். மனோகரி தமிழைப் பார்த்தும், உன்னை யார் இங்க வர சொன்னது என்று சொல்லி அவளை ஹாஸ்பிடல் போக விடமாட்டேன் என்று பிரச்சனை செய்கிறாள். அப்போது கனவல்லி வந்து யாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், என் பேரக்குழந்தைகளுக்காக தமிழ் இங்கே தான் இருப்பாள் என்று சொல்ல, மனோகரி போட்ட திட்டம் எல்லாம் இப்படியாகிவிட்டதே என்ற வருத்தப்படுகிறாள். இதையடுத்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











