சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலுக்கு சிறந்த டாக்டருக்கான விருது கொடுக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் செழியன் பேசி முடித்து எழிலுக்கு விருது கொடுக்க இந்துமதி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள், குழந்தைகள் பங்க்ஷனில் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்திருக்க திடீரென சாக்லேட் வைத்திருப்பதை பார்க்கின்றனர், அப்பாவுக்கு தெரியாமல் போய் சாக்லேட் சாப்பிடணும் என்று பிளான் போடுகின்றனர்.
இதை கவனித்த இந்து பசங்க சாக்லேட் சாப்பிடுறதை எழில் பார்த்தா அவ்வளவு தான், அவருக்கு சாக்லேட் சாப்பிடுறது பிடிக்காதே என்று பிள்ளைகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ன செய்வது என்று யோசிக்கிறாள். இந்த நேரத்தில் பிள்ளைகளும் எழிலுக்கு தெரியாமல் சாக்லேட் எடுப்பதற்காக வந்து விடுகின்றனர் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், இந்த நேரம் பார்த்து சுடர் இங்கு வர இவ கண்ணில் பட கூடாது என மறைந்து கொள்கிறாள். அதன் பிறகு காவியா சாக்லேட்டை கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்க கவின் ஜூஸ் பாட்டிலை எடுத்து அடிக்க அது டாக்டர் மீது பட்டு விட எழில் கோபப்பட்டு கவினை அறைய கை ஓங்குகிறான்.
குழந்தைகளை திட்டும் எழில்: சுடர் ஓடி வந்து எழிலை கையை பிடித்து சார் அவங்க குழந்தைங்க.. எல்லோரும் உங்களை தான் பாக்குறாங்க என்று சொல்ல எழில் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என ஆவேசப்படுகிறான். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளை பிடித்து திட்ட மனோகரி நீ நினைக்கிற மாதிரி பசங்க வளரணும்னா அதுக்கு ஒரே வழி தான் இருக்கு, அது ஹாஸ்டலில் சேர்க்கிறது தான் என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.
சாவல்விடும் சுடர்: ஆனால் சுடர் எந்த குழந்தைகளால் உங்க பேரு கெட்டு போச்சோ அதே குழந்தைகளால் உங்க பேரை காப்பாத்துகிறேன். பசங்க ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் அவங்களை கலந்துக்க வச்சி ஜெயிக்க வைக்கிறேன் என்று சொல்கிறாள். எழிலும் இதை சவாலாக எடுத்து அப்படி உன்னால பண்ண முடியலனா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கண்டிஷன் போடுகிறான். மனோகரி இதை நடக்க விட கூடாது. இந்த சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











