மனோகரி செய்த வேலை.. பொங்கி எழுந்த சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அஞ்சலியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர கனகவல்லி இனி யார் என்ன சொன்னாலும் சுடர் நம்ம கூட இருப்பா என்று சொல்ல மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இதனையடுத்து சுடர் வீட்டிற்குள் நுழைய தயங்கியபடி நிற்க கனகவல்லி உனக்கு என்ன வெத்தலை பாக்கு வச்சி கூப்பிட்டா தான் வருவியா என்று கேட்கிறாள்.
அதன் பிறகு சுடர் உள்ளே வர எழில் இனிமே இவ கீழ தான் இருக்கனும், அஞ்சலிக்காக மட்டும் தான் இவளை வீட்டிற்குள் இருக்க அனுமதி தரேன், அஞ்சலியை தவிர வேற யாரும் இவ கூட பேச கூடாது என்று கண்டிஷன் போடுகிறான். நைட் ஆனதும் சுடர் கவலையில் உட்கார்ந்திருக்க அவள் அருகே வரும் அஞ்சலி உன்ன எப்படி கூப்பிடனும்? சுடரா? தமிழா? என்று கேட்க உனக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படி கூப்பிடு என்று சொல்ல அஞ்சலி, தமிழை அம்மா என்று அழைக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மனோகரி செய்த காரியம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், , அஞ்சலி சுடருடனே இருக்க அங்கு வரும் மனோகரி, சுடர் கிட்ட பேசாத என்று திட்டி இழுத்து செல்ல அஞ்சலி சுடர் போகாத போகாத என்று அழ பொங்கி எழும் சுடர் நான் அஞ்சலிக்காக தான் இந்த வீட்டில் இருக்கேன், அஞ்சலிக்கு ஒன்னுனா அந்த பழி என் மேல தான் வந்து விழும், அவ என்கூட தான் இருப்பா, அவளை என்கிட்ட இருந்து பிரிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று ஷாக் கொடுக்கிறாள். இதனையடுத்து மனோகரி வேலுவுக்கு போனை போட்டு சீக்கிரம் இந்த சுடரை இங்க இருந்து கூட்டிட்டு போற வேலையை பாரு இல்லனா சுடர் உனக்கு கிடைக்க மாட்டா, எழில் எனக்கு கிடைக்க மாட்டான் என்று சொல்கிறாள்.

திட்டி தீர்த்த எழில்: இதையடுத்து, எழில் ஹாஸ்பிடல் கிளம்ப, செல்வியை கூப்பிட அவள் வராததால், சுடர் அவனுக்காக வேலை செய்ய எழில் அதை அவாய்ட் செய்கிறான். எழில் தொடர்ந்து அவளை அவாய்ட் செய்ததால், ஒருகட்டத்தில் சுடர் உங்களுக்கு என்ன தான் கோபம், அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வழிமறித்து கேள்வி கேட்க, டென்ஷனான எழில், உன் மேல என் குடும்பமே நம்பிக்கை வைத்து இருந்தது. அதை கெடுத்துட்ட. அஞ்சலிக்காக மட்டும் தான் உன்னை இந்த வீட்டில் இருக்க சொன்னேன். என் பசங்க மனச மாற்றிவிட்ட, பசங்களை என் பசங்களா மாற்றி என்னிடம் ஒப்படைத்துவிட்டு போய்விடு என்று எழில் கோபத்தில் கத்த, அப்படியே இடிந்து போய் இருக்கிறாள் சுடர்.

சுடரை தேடி வரும் அப்பா: இதையடுத்து, சுடர் சோகமாக உட்கார்ந்திருக்கும் போது, அவருடைய அப்பா போன் செய்கிறார். எப்படி பா இருக்கீங்க என்று கேட்க நீ இருக்க வீட்டு வாசலில் தான் இருக்கேன் என்று சொன்னதும் சுடர் கீழே ஓட இதை பார்த்து மனோகரியும் பின்னாடியே செல்கிறாள். சுடர் அப்பாவை பிடித்து அழுது எங்கப்பா தங்கி இருக்கீங்க என்று கேட்க தங்க இடம் இல்லமா, இங்க தங்கிக்கவா என்று கேட்கிறார். சுடர் இங்க ஒரு பிரச்சனையாகி நானே இப்ப தான் பா உள்ளே வந்திருக்கேன், அதனால் தங்க முடியாது என்று சொல்ல மனோகரி வேலுவுக்கு போன் போட்டு சுடரை பார்க்க யாரோ வந்ததாக சொல்ல அவன் அங்க அடையாளங்களை கேட்டு அது சுடரின் அப்பா சுப்பிரமணி என்பதை உறுதி செய்து கொண்டு கோபமாக கிளம்பி வருகிறான். இதையடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











