பன் மூவ்மெண்ட் கலாட்டாவாக மாறிய நினைத்தேன் வந்தாய்.. சவால் விட்டு சிக்கிய எழில்.. இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அஞ்சலி சுடருடனே இருக்க அங்கு வரும் மனோகரி, சுடர் கிட்ட பேசாத என்று திட்டி இழுத்து செல்ல அஞ்சலி சுடர் போகாத போகாத என்று அழ பொங்கி எழும் சுடர் நான் அஞ்சலிக்காக தான் இந்த வீட்டில் இருக்கேன், அஞ்சலிக்கு ஒன்னுனா அந்த பழி என் மேல தான் வந்து விழும், அவ என்கூட தான் இருப்பா, அவளை என்கிட்ட இருந்து பிரிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று ஷாக் கொடுக்கிறாள்.
இதையடுத்து, எழில் ஹாஸ்பிடல் கிளம்ப, செல்வியை கூப்பிட அவள் வராததால், சுடர் அவனுக்காக வேலை செய்ய எழில் அதை அவாய்ட் செய்கிறான். எழில் தொடர்ந்து அவளை அவாய்ட் செய்ததால், ஒருகட்டத்தில் சுடர் உங்களுக்கு என்ன தான் கோபம், அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வழிமறித்து கேள்வி கேட்க, டென்ஷானான எழில், உன் மேல என் குடும்பமே நம்பிக்கை வைத்து இருந்தது. அதை கெடுத்துட்ட. அஞ்சலிக்காக மட்டும் தான் உன்னை இந்த வீட்டில் இருக்க சொன்னேன் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து,இன்றைய எபிசோடில், அஞ்சலி தூங்காமல் எழுந்து வந்து நான் உன்கூட தான் தூங்குவேன் என்று சுடர் ரூமுக்கு வருகிறாள். சுடர் அப்பா பக்கத்தில் தான் இருக்கு நீ அங்க போய் தூங்கு இல்ல மேல போய் மத்தவங்களோட சேர்ந்து தூங்கு என்று சொல்ல அஞ்சலி நான் உன் கூட தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள். இதனால் சுடரும் சம்மதம் சொல்ல சுடர் சோகமாக இருப்பதை பார்த்து அஞ்சலி நான் ஒரு கதை சொல்லட்டுமா என்று கதை சொல்லி சுடரை சிரிக்க வைக்க இருவரும் சிரிக்க சிரிப்பு சத்தத்தை கேட்டு அஞ்சலி டைம் ஆச்சுல இன்னும் இங்க என்ன பண்ற ரூமுக்கு போ என்று திட்டி அஞ்சலியை அழவைத்து மேலே அனுப்பி வைக்கிறான்.
எழிலை பாடாய் படுத்தும் குழந்தைகள்: இதனால் சுடர் உங்களால குழந்தைங்க உலகத்துக்குள்ள வரவே முடியாது. கோபப்பட மட்டும் தான் தெரியும் என்று திட்ட எழில் குழந்தைகளை என்னுடைய கண்ட்ரோலுக்குள் கொண்டு வர முடியும். என்னால குழந்தைங்கள பாத்துக்க முடியும். ஒரே வாரத்துல செய்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். மறுநாள் காலையில் சுடருக்கு முன்பாக ரூமுக்கு வந்த எழில் குழந்தைகளை எழுந்திருங்க என்று சொல்லிவிட்டு வெளியே வர சுடர் சொன்னதும் அவங்க எழுந்துடுவாங்களா போய் பாருங்க என்று சொல்ல எழில் திரும்பி ரூமுக்கு வர எல்லோரும் தூங்கிக் கொண்டே இருக்கின்றனர்.
எழிலை கலாய்க்கும் சுடர்: பிறகு எழில் எல்லோரையும் எழுப்பி குளிக்கணும் என்று சொல்ல அஞ்சலி சுடர் தான் குளிக்க வைப்பா என்று சொல்கிறாள். இன்னைக்கு நான் குளிக்க வைக்கிறேன் என்று அவளை கூட்டிச் செல்லும் எழில் கடைசியில் நனைந்து வருவதை பார்த்து சுடர் சிரிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவினை குளிக்க வைக்க மறந்துட்டீங்க என்று எழிலுக்கு ஞாபகப்படுத்தி கலாய்க்க அவன் கவினை குளிக்க வைக்க கூட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











