இந்துவுக்கு தெரியவந்த உண்மை.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வேலு சுடரை உயிரோடு புதைக்க எழில் அவளை தேடி கண்டுபிடித்து அவளை வெளியே கொண்டு வருகிறான். ஆனால் சுடர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க எழில் முதலுதவி கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். ஹாஸ்பிடலில் சுடருக்கு சிகிச்சை கொடுக்க தொடங்கியதும் அவள் கண் விழிக்க சுடரின் அப்பா டாக்டருக்கு நன்றி சொல்ல டாக்டர் எழிலுக்கு நன்றி சொல்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இந்து, சுடரைப்பார்க்க மருத்துவமனைக்கு வருகிறாள். அப்போது, மருத்துவமனையில் வார்டன் சாரதாவை பார்க்கிறாள், ஆனால், சாரதா, சுடரின் அப்பாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் டாக்டர் வர, சுடரின் அப்பா டாக்டரிடம் பேசி கொண்டு இருக்கிறார்.இப்படியான நிலையில் இன்று நடப்பதை பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், இந்து சாரதா பக்கத்தில் வந்து நின்று கொண்டிருக்கும் நேரத்தில் சாரதா சண்முகத்தை பார்த்து உங்ககிட்ட பேசணும் என சைகை காட்ட சுடரின் அப்பா அதை கவனிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார். இதைத்தொடர்ந்து சாரதா என்ன சண்முகம் சார், நான் கூப்பிடறது கூட கவனிக்காம போயிட்டீங்களே உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும் நீங்க கொண்டு வந்து கொடுத்த உங்க பொண்ணு இந்து இப்போ உயிரோட இல்லை என்று சொல்ல இதைக்கேட்ட இந்துவிற்கு சுடர் தனது தங்கை என்பதும், சண்முகம் தன்னுடைய அப்பா என்ற உண்மையும் தெரிய வருகிறது.
நாடகமாடும் இந்து: பிறகு அங்கிருந்து வீட்டுக்கு வந்த இந்து, தீபாவிடம் ஹாஸ்பிடலில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதைக் கேட்ட தீபா அப்படின்னா சுடர் உன்னுடைய தங்கச்சியா என்று கேட்கிறாள். மேலும் இதனை உறுதி செய்து கொள்வதற்காக தீபா மற்றும் இந்து என இருவரும் கணக்கெடுக்க வருவது போல ஷண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். அவரிடம் உங்க குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் என்று தீபா விசாரிக்க அவர் நானும் என் பொண்ணும் மட்டும் தான் இருக்கோம். இன்னொரு பொண்ணு இருந்தா.. அவள சின்ன வயசுலயே ஆசிரமம் ஒன்றில் கொடுத்துட்டேன் என்று சொல்ல இந்து அதை கேட்டு கண் கலங்குகிறாள்.
கண்கலங்கும் இந்து:சண்முகம் பக்கத்தில் உட்கார்ந்து அப்பா நான் தான் உங்க பொண்ணு இந்து வந்திருக்கேன் என்னை பாருங்க என எமோஷனலாக பேசுகிறாள். சண்முகம் யாரோ தன்னைத் தொட்டது போல உணர்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











