கட்டிப்புடி கட்டிப்புடி டா.. ஓடாத சீரியலை ஓட வைக்க அந்த காட்சி.. கிறங்க வைத்த அபிராமி!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் கணேஷ் வெங்கட், கீர்த்தனா, அஞ்சலி ராவ், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்து வருகின்றனர் இந்த சீரியலில் வந்திருக்கும் ரொமான்ஸ் காட்சியைப் பார்த்து இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நினைத்தேன் வந்தாய் சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட் நடித்து வருகிறார். அவர் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரது மனைவி இந்து விபத்து ஒன்றில் இறந்து விடுகிறாள். இதனால் நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக சுடர் என்ற பெண் அந்த வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு தேவையானதை செய்கிறாள், அந்த குழந்தைகள் சுடரே தனக்கு அம்மாவாக வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

ninaithen vandhai ganesh venkatram amirami

நினைத்தேன் வந்தாய்: ஆனால், எழிலின் கல்லுரி தோழியான மனோகரிக்கு எழில் மீது இருந்த காதலால், அவரின் மனைவி இந்துவை கொன்றுவிட்டு, விபத்து போல நாடகமாடுகிறாள். எப்படியாவது எழிலுக்கு இரண்டாவது மனைவியாகும் ஆசையுடன் அதே வீட்டில் இருக்கிறாள். ஆனால், விதி வேறுவிதமாக அமைந்து, வீட்டு வேலைக்கு வந்த சுடரை எழில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு விட்டதால், மனோகரி, சுடரையும் எழிலையும் ஒன்று சேரவிடாமல் தடையாக இருக்கிறாள்.

கட்டிப்புடி கட்டிப்புடி டா: கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி தான் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ஜாஸ்மின் நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக அந்த சுடர் கதாபாத்திரத்தில் அபிராமி நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு அபிராமி வந்த பிறகு இந்த சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அடிக்க ரொமான்ஸ் நடப்பது போல காட்சிகள் வருகின்றனர். அந்த வகையில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் பேக்ரவுண்டில் ஒளிபரப்பாக, அது ஒருவிதமான படுக்கை அறை காட்சியாகவே இருந்தது இதைப்பார்த்த பேன்ஸ் இது சீரியல் மாதிரி தெரியலையே என கருத்தக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X