சரிகமப சீனியர்ஸ் சீசன் 5.. டி ராஜேந்தரை கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இந்த சரிகமப ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி முடிந்தது. இதில் திவினேஷ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

saregamapa Zee tamil

ஜீ தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் கிராண்ட் பினாலே மே 11 ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன், சந்தானம், ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, தினேஷ், அபினேஷ் மற்றும் மகதி என ஆறு போட்டியாளர்கள் இந்த இறுதி போட்டியில் மோதினர். இதில், திவினேஷ் இந்த சீசனின் வெற்றியாளராக வெற்றி பெற்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், மெல்லிசை இளவரசர் என்ற விருதையும் வழங்கி ZEE தமிழ் வழங்கி கௌரவித்தது. முதல் ரன்னராக யோகஸ்ரீ மற்றும் இரண்டாவது ரன்னராக ஹேமித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த சீசனை அர்ச்சனா வழங்கினார்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிவடைந்ததை அடுத்து, மே 24-ம் தேதியான இன்று முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெற உள்ளனர். ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் வாரத்தில் மெகா ஆடிஷன் மூலமாக போட்டியில் பங்கேற்க உள்ள இறுதி கட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஒரு போட்டியாளரை தேர்வு செய்த டி ராஜேந்திரன், பாடலை கேட்டு கண் கலங்கினார். இன்று முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7:00 மணிக்கு உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த முறையும் ZEE தமிழ் சரிகமப பல சாமானிய போட்டியாளர்களை சாதனையார்களாக மாற்றும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X