Veera: விடாமல் பிடித்த வீரா.. பெட்டில் படுத்த மாறன்.. செம ரொமான்ஸ்.. வீரா சீரியலில் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தில்யில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல்களில் ஒன்று வீரா. எப்போதும் காமெடியாக இருக்கும் கதாநாயகன் மாறன், மாறனின் காதல் மனைவி வீரா பெயருக்கு ஏற்ற வகையில், மிகவும் தைரியமாக இருக்கும் பெண். இவர்களின் குடும்பம் ஒரு புள்ளியில் இணைந்து, அதன் பின்னர் எப்படியெல்லாம் கதை நகர்கின்றது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி வருகின்றார், இயக்குநர், சிவசேகர். வீரா சீரியல் 250 எபிசோட்களைக் கடந்து வெற்றி வாகை சூடி வருகின்றது. இப்படியான நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கின்றது என்பது குறித்து காணலாம்.
வீராவிற்கு ஏற்பாடு செய்த திருமணத்தில் மாறன் திடீரென தாலி கட்டி, வீராவை தனது மனைவியாக்கிக் கொண்டதால், வீராவுக்கு மாறன் மீது மேலும் கோபம் அதிகரித்தது. இதனால் இருவரும் வெளியில் கணவன் மனைவி போல காட்டிக் கொண்டாலும், இருவரும் எலியும் பூனையுமாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள். வீராவை விவாகரத்து செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது, வீராவின் அக்காவான கண்மணியின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டு, மாறனுடன் இருப்பதுதான் தான் சரி என முடிவு எடுக்கின்றார்.

ஆனாலும் மாறனை ஏற்றுக்கொள்ளாத வீரா, தனது அக்காவை திருத்த வேண்டும் என்கின்ற முயற்சியில் மட்டும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றார். இப்படியான நிலையில்தான் தனது அண்ணனின் மரணத்திற்கு காரணம், தனது கணவன் மாறன் இல்லை, தனது அக்காவின் கணவர் ராகவன் தான் என்பதைக் கண்டு பிடிக்கின்றார்.
இன்றைய எபிசோட்: அதன் பின்னர், மாறன் மீதான பார்வை, முற்றிலுமாக மாறி, கோபம் காதலாக மாறுகின்றது. எலியும் பூனையுமாக இருந்தபோது, மாறன் தரையிலும், வீரா பெட்டிலும் படுத்துக் கொண்டு இருந்தனர். இப்போது வீராவுக்கு காதல் வந்துவிட்டதால், மாறன் படுத்து தூங்கிக் கொண்டு இருந்த பாயை எடுத்து ஒளித்து வைக்கின்றார். பெட்ரூமிற்குள் வந்த மாறன் தனது பாயைத் தேடுகின்றார். முதலில் வீரா தனக்குத் தெரியாது எனக் கூறுகினார்.

ஒரே பெட்டில் மாறன் - வீரா: எப்படியோ மாறன் தனது பாயைக் கண்டு பிடித்து, கீழே படுக்கின்றார். இதனால் ஏமாற்றம் அடைந்த வீரா, அதன் பின்னர் மாறனை பெட்டில் படுக்க வைக்க, இன்னோரு ஐடியாவை செயல் படுத்துகின்றார். அதாவது, ஏ.சியையும் ஆன் செய்துவிட்டு, ஃபேனையும் போட்டுவிடுகின்றார். இதனால் தரையில் படுத்திருக்கும் மாறனுக்கு குளிருகின்றது. வீராவிடம் ஏ.சி அல்லது ஃபேனை ஆஃப் செய்யச் சொல்கின்றார் மாறன். ஆனால் அதெல்லாம் செய்யமுடியாது எனக் கூறும் வீரா, மாறனை பெட்டில் படுக்கச் சொல்கின்றார்.
ரொமான்ஸ்: இதனால் வேறு வழி இல்லாமல் பெட்டில் படுக்கின்றார் மாறன். அதன் பின்னர் மாறனை பார்த்துக் கொண்டும் அவரது கண்களைத் தொட்டுக் கொண்டும் உள்ளார் வீரா. இந்த ரொமான்ஸ் காட்சிகளுக்கு, பின்னணியில் அனல் மேலே பனித்துளி பாடல் ஒலிக்கின்றது. இவர்களின் ரொமான்ஸ் உடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகின்றது.


Click it and Unblock the Notifications