ஜவ்வு போல இழுத்த கார்த்திகை தீபம் சீரியல்.. அநியாயமா ஹீரோயினை கொன்னு என்ட் கார்டு போட்ட இயக்குநர்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் 2022ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ரெண்டு மாதமாக ஜவ்வு போலன இழுத்துக்கொண்டு இருந்த இந்த சீரியலுக்கு என்ட் கார்டு முடித்துள்ளார் இயக்குநர்.

கார்த்திக் தீபா சீரியலில் ரம்யா கார்த்திக் மீது காதல் கொண்டார், இதனால் இதற்கு இடையூறாக இருந்த தீபாவை கடத்தில் அவனை கொல்ல திட்டம் போட்டு மலையில் இருந்து தள்ளிவிட திட்டம் போட்டாள். ஆனால், அந்த நேரத்தில் ரம்யா தவறி மலை உச்சியில் இருந்து விழுந்துவிட்டாள். இதை மறைந்து இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா, தீபாவை தள்ளிவிட அவள் படுகாயத்துடன் இருக்கிறாள். தீபாவை மீட்டு ஒரு பெண் மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கிறாள்.

zee tamil karthigai deepam

ஐஸ்வர்யாவின் அட்டகாசம்: அனைவரும், தீபா இறந்துவிட்டதாக சொல்லியபோதும், கார்த்திக், தீபா சாகவில்லை என உறுதியாக நம்பி, பல இடத்தில் தேடி வந்ததை அடுத்து தீபா உயிரோடு இருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாசத்திற்கும் மேலாக, கார்த்திக் தீபாவை தேடுவது போலவும், கடைசி நேரத்தில் ஏதாவது நடந்து கார்த்திக் தீபாவை பார்க்க முடியாமல் போய்விடும். இருக்கிற இந்த இழுவை பத்தாது என்று ஐஸ்வர்யா, தீபாவை கொல்ல ஜெயிலில் இருந்தே திட்டம் போடுவார். அதுக்கூட பரவாயில்லை. ஜெயில் இருந்த தப்பித்து போலீசின் துப்பாக்கியை தூக்கிட்டு வந்து விடுவார்.

பாவம் பா தீபா : ஒரு பக்கம் தீபா, ஒரு பக்கம் ஐஸ்வர்யா என கதை சுத்தி சுத்தி ஒரே குட்டையை குழப்பியது போல இருந்தது. இதனால் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களும் என்னடா ஒரே கடுப்பா இருக்கு என கமெண்டுகளை பகிர்ந்து வந்தனர். இதனால் ஒரு முடிவுக்கு வந்த இயக்குநர் கார்த்திகை தீபம் சீரியல் ஹீரோயின் தீபாவின் கதையை முடித்துவிட்டு சீரியலுக்கு என்ட் கார்ட் போட்டுள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் சீரியலை முடிக்க, அநியாயமாக ஹீரோயினை கொன்னுட்டீங்களே இது உங்களுக்கே நல்ல இருக்காக என கேட்டு வருகின்றனர்.

சீசன் 2: தற்போது கார்த்திகை தீபம் சீசன் 2 குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இதில் கார்த்திக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் இதில் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X