அடுத்தடுத்த கொலை செய்த ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் சீரியலால் கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: நேற்றைய எபிசோடில், துங்காவை போலீஸ் விசாரணைக்காக அழைத்து வந்திருக்க துங்கா பசிக்கிறது என்று சொல்ல அவனை போலீஸ் கடைக்கு அழைத்து செல்லும்போது போலீசின் கவனத்தை திசை திருப்பி தப்பி செல்கிறான். கச்சேரி நடத்தும் இடத்தில் தீபா வருவாள் என்ற நம்பிக்கையுடன் அபிராமி குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மீனாட்சி, முருகர் சிலையை கையில் வைத்துக்கொண்டு, கடவுளே தீபா உன்னோட பக்தை தயவு செய்து சபாக்கு அவளை பத்திரமா அழைத்து வந்துவிடு என்று வேண்டிக்கொண்டு இருக்கிறாள். அப்போது, அங்கு கீதா, கார்த்திக் இருவரும் வருகின்றனர். அப்போது கார்த்திக், என்ன அண்ணி சோகமாக இருக்குறீங்க என்று கேட்க, ஆமாம், கார்த்திக் நேரம் ஆக ஆக என்ன ஆகுமோ என்கிற பயமா இருக்கு, ஒரு பக்கம் ஐஸ்வர்யா, மறுபக்கம் துங்கா, இவங்களை மீறி தீபா எப்படி வருவா என்று வருத்தப்பட்டு பேசுகிறாள்.

zee tamil karthigai deepam

தீபாவாக மாறிய கீதா: அப்போது கார்த்திக், வருத்தப்படாதீங்க தீபா நிச்சயம் வருவா, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, அதற்காக ஒரு ஐடியாவும் என்னிடம் இருக்கு என்கிறான். இதையடுத்து, கச்சேரி நடக்கும் இடத்தில் கீதா கார்த்தியிடம் நான் தீபாவை போல கெட்டப் மாற்றிக் கொள்கிறாள். அதனால் துங்காவை குழப்பி தீபாவை கச்சேரி நடக்கும் இடத்திற்கு கொஞ்சம் ஈசியாக அழைத்து வந்துவிடலாம் என்று சொல்லி கீதாவை, தீபாவை போல கெட்டப்பை மாற்ற சொல்லுகிறான்.

zee tamil karthigai deepam

வேனில் ஏறிய துங்கா: மறுபக்கம் சக்தி நர்ஸ் மற்றும் ஆசிரமத்தில் இருப்பவர்களுடன் தீபாவுடன் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது போலீசில் இருந்து தப்பித்த துங்கா, அந்த வழியாக வந்த வேனை வழி மறித்து அதில்ஏறிக்கொள்கிறான். அப்போது, வேனில் இருந்த சிஸ்டர், சார் இந்த வட்டியில் ஏறக்கூடாது இறங்குங்கள் என்றுசொல்ல, துங்கா தன்னுடைய கார் ரிப்பேர் ஆகி ,விட்டதாக பொய் சொல்லி உதவி கேட்கிறான். அப்போது பின் சீட்டில் இருக்கும் சக்தி, துங்காவை பார்த்துவிட்டு இது என்னடா புது குழப்பம் என்று சொல்லி சீட்டுக்கு அடியில் தீபாவையும் சேர்த்து மறைத்துக்கொள்கிறாள். துங்கா தீபாவை பார்த்து விடுவானா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறுகிறது.

zee tamil karthigai deepam

ஐஸ்வர்யா செய்த அடுத்தடுத்த கொலை: இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா துணி கடைக்கு வந்து சிங் போல தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு வெளியே வருகிறாள். அப்போது கடை ஓனர் சந்தேகப்பட்டு, யார் நீ எதுக்கு இந்த மறுவேஷம், யார ஏமாத்த பாக்குற என்று போலீசுக்கு தகவல் கொடுத்த, அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகிறாள். எது நடந்தாலும் தீபா இங்கே தான் வருவாள். அவள் வந்ததும் சுட்டுத்தள்ள வேண்டியதுதான் என்று கூட்டத்தோடு கூட்டமாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X