கார்த்தி மடியில் உயிரை விட்ட தீபா.. கண்ணீரோடு முடிந்த கார்த்திகை தீபம்.. புதிய கதைகளத்துடன் சீசன்2!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா மேடை ஏற்றப்பட்ட பிறகும் சுயநினைவு வராமல் பித்து பிடித்தார் போல் உட்கார்ந்து இருக்க தீபாவின் அம்மா ஜானகி, மைதிலி, அபிராமி ஆகியோர் அவளிடம் உருக்கமாக பேசி நினைவுகளை திருப்பி கொண்டு வர முயற்சி செய்கின்றனர். ஆனாலும், தீபாவிற்கு சுயநினைவு வராமல் இருக்க அனைவரும் கை தட்டுகின்றனர்.
இன்னொரு பக்கம் போலீஸ் ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்க முயற்சி செய்ய இதன் ஒரு ரூமுக்குள் சென்று அங்கிருக்கும் பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு போலீஸ் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் அந்த ரூமுக்கு வந்து பார்க்க அங்கே அந்த பை இல்லாமல் போக பையின் உரிமையாளரை தேடி அந்த பெண்மணியை அடித்து பேக்குக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் மேடை ஏறிய தீபாவிற்கு சுயநினைவு வர, முருகனை நினைத்து உருகி உருகி பாட்டுப்பாடுகிறாள். அப்போது, அங்கு வரும் ஒரு நர்ஸ், சக்தியிடம் தீபா பாடக்கூடாது, அப்படி பாடுனா உயிருக்கே ஆபத்து என்று சொல்ல, நர்ஸ் சக்தி அதிர்ச்சி அடைந்து விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறாள். ஆனால், தீபா தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பதால் கார்த்திக், மருத்துவருக்கு போன் செய்து வர சொல்லுகிறான்.
உயிர் விட்ட தீபா: இந்த நேரத்தில், பாடிக்கொண்டு இருந்த தீபா அப்படியே மயங்கி விழ, மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு, தீபா இப்போ ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறார்கள், இவர்கள் பிழைப்பது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். அப்போது, தீபா, கார்த்திக்கின் கையை பிடித்து, நான் உங்க கூட ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை.

ஆனால், நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ வேண்டும் என்று சொல்லி சத்யம் செய்ய சொல்லிகேட்க, கார்த்திக் சத்தியம் மறுத்து கதறி அழுகிறான். அப்போது, தீபா நீங்க நல்லா வாழ வேண்டும் கார்த்திக் என்று கையில் சத்தியம் வாங்கிக்கொண்டு கார்த்தியின் மடியில் உயிர்விடுகிறாள். இத்தோடு கார்த்திகை தீபம் சீரியல் முடிவடைகிறது.
கார்த்திகை தீபம் சீசன் 2: இதையடுத்து, இப்போது, முற்றும் மாறுபட்ட களத்தில் கார்த்திகை தீபம் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார்.

மேலும் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் கார்த்திகை தீபம் சீரியல் புதிய பொலிவுடன் சின்னத்திரையை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











