இறக்கும் நேரத்தில் தீபா வாங்கிய சத்தியம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவிற்கு சுயநினைவு வராமல் பித்து பிடித்தார் போல் உட்கார்ந்து இருக்க தீபாவின் அம்மா ஜானகி, கடவுளே என் மகளுக்கு சுயநினைவு வந்து பாட்டு பாட வேண்டும், அது தான் அப்பாவோட ஆசை என்று புலம்பி கொண்டு இருக்கிறாள். மைதிலி, அபிராமி எவ்வளவு முயற்சி செய்தும் தீபாவிற்கு சுயநினைவு வரவில்லை.. ஆனாலும், தீபாவிற்கு சுயநினைவு வரவைக்க அனைவரும் கை தட்டுகின்றனர்.
மேடை ஏறிய தீபாவிற்கு சுயநினைவு வர முருகனை நினைத்து உருகி உருகி பாட்டுப்பாடுகிறாள். அப்போது, அங்கு வரும் ஒரு நர்ஸ், சக்தியிடம் தீபா பாடக்கூடாது, அப்படி பாடுனா உயிருக்கே ஆபத்து என்று சொல்ல, நர்ஸ் சக்தி அதிர்ச்சி அடைந்து விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறாள். ஆனால் அதற்குள் தீபா அப்படியே மயங்கி விழுந்து. கார்த்திக்கின் கையை பிடித்து, நான் உங்க கூட ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை.

கதறி அழும் குடும்பம்: நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ வேண்டும் என்று சொல்லி சத்யம் செய்ய சொல்லிகேட்க, கார்த்திக் சத்தியம் மறுத்து கதறி அழுகிறான். அப்படியே கார்த்தியின் மடியில் தீபாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. இதைப்பார்த்து அனைவரும் கதறி அழ, நர்ஸ் சக்தி அய்யோ, உங்களை பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் எல்லாம் வீணா போச்சே, எப்படியாவது உங்களை, உங்க கணவர் கூட வாழவைக்க வேண்டும் என்று ஆசைபட்டேனே என்று கதறி அழுகிறாள். ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து இருக்கிறது.
மூக்கில் வடிந்த ரத்தம்: அப்போது, தீபா மூக்கில் இருந்து வடிந்த ரத்தத்தை பார்த்த மருத்துவர், தீபா இத்தனை நாளாக சுயநினைவில் இருந்தார். அவருக்கு திடீரென நினைவு திரும்பி இருக்கு, இதனால், மேடையில் எப்படியாவது பாட வேண்டும் என்று கஷ்டப்பட்டு பாடியதால், இப்படி ஆகிவிட்டது என்று சொல்ல அனைவரும் கண்கலங்குகின்றனர். இந்த சீரியல் நாளையோடு முடிந்து அடுத்த வாரத்தில் இருந்து கார்த்திகை தீபம் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது. அதில் கார்த்திக் கிராமத்து இளைஞராக நடிக்க உள்ளார். மேலும் , ரேஷ்மா பசுபுலேட்டி வில்லியாக நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











