ஐஸ்வர்யா சொன்ன அந்த பொய்.. அபிராமியை கைது செய்யும் போலீஸ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவை கொலை செய்தது ஐஸ்வர்யா என்கிற உண்மை தெரிந்ததும், அருண் இனிமே ஐஸ்வர்யாவோட வாழ முடியாது.. அவளுக்கு இனி இந்த வீட்டில் இடமும் இல்லை என்று ஆவேசப்படுகிறான். இவ்வளவு நாளா இந்த விஷ பூச்சியோட சேர்ந்து வாழ்ந்தேனு சொல்லும் போது எனக்கே அருவருப்பா இருக்கு என்று கோபப்படுகிறான்.
மறுபக்கம்,கார்த்திக் மற்றும் அருண் என இருவரையும் வழிமறிக்கும் ராஜேஸ்வரி ஐஸ்வர்யா என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் அவளை ஜெயிலுக்கு அனுப்பியது எல்லாம் சரியே இல்லை என்று சொல்ல அருணுக்கும் ராஜேஸ்வரிக்கும் வாக்குவாதம் உருவாகிறது. பிறகு ராஜேஸ்வரி, ஐஸ்வர்யாவை சந்தித்து ஆறுதல் சொல்ல என்னை ஜெயிலுக்கு அனுப்பிய அந்த கார்த்திக்கை சும்மா விடகூடாது , பழி வாங்கியே ஆக வேண்டும் என்று ஆவேசப்படுகிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது, ஐஸ்வர்யா தரப்பில் வக்கீல் யாரும் இல்லாத நிலையில் அவள் என்னுடைய தரப்பு நியாயத்தை நானே சொல்றேன் என்று சொல்லி, ஐஸ்வர்யாவே வாதாடுகிறாள். இதில், இவர்கள் அனைவர் சொல்வது அனைத்தும் பொய், நான் தீபாவை தள்ளி விட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறாள்.
பொய் புகார்: மேலும் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாங்க, அதை கொடுக்கவில்லை என்பதால் இப்படி போலியான கேஸ் போட்டு என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டாங்க என்று மாற்றி பேச அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆஜராகி இவங்க தான் தீபாவை தள்ளி விட்டு இருக்காங்க. அதை அவங்களே குடும்பத்தாரிடம் ஒப்பு கொள்ளவும் செய்திருக்காங்க என்று சொல்ல நீதிபதி அதற்கான ஆதாரத்தை கேட்கிறார். ஆதாரம் இல்லை என்று இன்ஸ்பெக்டர் சொல்ல நீதிபதி ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லி விடுகிறார். இதனால் ஐஸ்வர்யா சொன்னது உண்மை போல் ஆகி விடுகிறது.
அபிராமியை கைது செய்யும் போலீஸ்: ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரி வரதட்சணை கேட்டு அபிராமி குடும்பம் கொடுமைப்படுத்துவதாக சொல்லி காவல் நிலையத்தில் கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் அபிராமியை கைது செய்ய போலீசார் வருகின்றனர். அப்போது, அபிராமி, ஐஸ்வர்யாவை என் குடும்பத்திற்கு பெரிய துரோகம் செய்துவிட்டாள் என்று சொல்ல, அப்போது காவல் துறை பெண் அதிகாரி, ஐஸ்வர்யாவை நீங்க வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்ல அபிராமி அதிர்ச்சி அடைகிறார்.
உச்சக்கட்ட கோவத்தில் கார்த்திக்: என் வீட்டில் பணத்திற்கு பஞ்சமே இல்ல நான் ஏன் மருமகளிடம் வரதட்சனை கேட்கப்போகிறேன். அவள் பொய் சொல்கிறான் என்று சொல்ல, அந்த காவல் துறை அதிகாரி எதுவாக இருந்தாலும், ஸ்டேஷனில் பேசிக்கொள்ளலாம் என்று அவரை அழைத்து செல்கின்றனர். இதைத்தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











