பொய்யால் அழிந்த ஐஸ்வர்யா.. கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரி வரதட்சணை கேட்டு அபிராமி குடும்பம் கொடுமைப்படுத்துவதாக சொல்லி காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்க போலீஸ் அபிராமியை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதைத்தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அதை கேட்டு கார்த்திக் ஆத்திரம் அடைகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் அபிராமியை வெளியே எடுக்க முயற்சி செய்ய இது வரதட்சணை கேஸ் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கின்றனர். அதன் பிறகு வழக்கறிஞரை அழைத்து வந்து பேச, இது ரொம்ப சீரியசான கேஸ், எங்களால் எதுவும் பண்ண முடியாது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பாத்துக்கோங்க என்கிறார் பெண் போலீஸ்.

இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த வழக்கறிஞர் இது வரதட்சணை கேஸ் கார்த்திக், இதில் இருந்து அம்மா வெளியில் வருவது கொஞ்சம் கஷ்டம் தான். கேஸ் கொடுத்தவர்களை வாபஸ் வாங்க வையுங்க என்று சொல்ல, கார்த்திக் நான் ஐஸ்வர்யாவின் அம்மாவை பார்த்து பேசுகிறேன் என்று கிளம்பி செல்கிறான்.
கார்த்திகை தீபம்: அதன் பிறகு ராஜேஸ்வரியை சந்தித்து பேச அவள் என் பொண்ணை உள்ள தள்ளிட்டு நீங்க மட்டும் எப்படி நல்லா இருக்கலாம் என்று பேச கார்த்திக் கோபப்பட்டு, எங்க அம்மா வரதட்சணை கேட்டாங்களா... ஏன் இப்படி பொய் சொல்றீங்க, என்று கேட்க, வரதட்சணை கேட்கலனு எனக்கும் உனக்கும் தான் தெரியும். ஆனால், நீங்க 100 சவரன் நகை கேட்டீங்க, பணம் கேட்டீங்க என்று கோர்ட்டில் வந்து அழுது, அந்த நீதிபதியை நம்ப வைப்பேன். உங்க அம்மா ஒழுங்க வீட்டுக்கு வரவேண்டும் என்றால், என் மகள் ஐஸ்வர்யா வீட்டுக்கு வர வேண்டும். அவ கிட்ட நீங்க எல்லாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், உன் அம்மா அபிராமி வீட்டிலேயே கிடந்து சாக வேண்டியது தான் எனறு ராஜலட்சுமி சொல்லி, கார்த்திக் கோவத்துடன் அங்கிருந்து கிளம்புகிறான்.
கூண்டில் நிற்கும் அபிராமி: இதை தொடர்ந்து அடுத்த நாள் கோர்ட் கூட அபிராமி தரப்பு லாயர் ஆஜராகி, இந்த குடும்பத்திற்கு ஏகப்பட்ட சொத்து இருக்கும் போது, இவர்கள் ஏன் ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தப்போகிறார்கள். அதுவும் இல்லாமல், அருண் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகா வரதட்சணை கேட்பார்கள் என்று சொல்லி வாதாடுகிறார். உடனே, ராஜேஸ்வரி இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உண்மையை மறைக்க பார்க்கிறார்கள். என் மகளை பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லி, அபிராமி மீதுஅடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











