தீபாவை கொல்ல வரும் ரௌடி.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவின் அப்பா தர்மலிங்கம், தீபா கிடைக்கும் வரை நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்த மாட்டேன் என்று கோவிலில் வாசித்துக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த நர்ஸ் சக்தி, இவர் தீபாவோட அப்பாவாக இருப்பாரோ என்று சந்தேகம் வர, அவரிடம் தீபாவை உங்களுக்கு தெரியுமா என்று கேட்ட, தர்மலிங்கம் அவள் என் மகள் தான் என்று சொல்ல, சக்தி, இப்போ தீபா என்னிடம் தான் இருக்காங்க நான் தான் அவங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல இருவரும் கிளம்பி தீபா இருக்கும் இடத்துக்கு செல்கின்றனர்.

அப்போது, கோவில் வாசலில் நின்றிருந்த துங்கா, சக்தி கடத்த வர அப்போது, தர்மலிங்கம் துங்காவை பிடித்து கொண்டு சக்தியை தப்பித்து போக சொல்கிறாள். சக்தியும் தப்பி ஆசிரமம் வந்து விடுகிறாள். அடுத்து துங்கா சக்திக்கு போன் செய்து தர்மலிங்கம் உயிரோடஇருக்கனும்னா தீபாவை கூட்டிட்டு வா என்று மிரட்ட வேறு வழியின்றி ஷக்தி தீபாவுடன் கிளம்பி வருகிறாள். மறுபக்கம் ஆசிரமத்தில் இருந்து ஒருவன் கார்த்திக்கு தீபா குறித்து தகவல் கொடுக்க வருகிறான். இந்த விஷயம் அறிந்த துங்காவின் ஆட்கள் அந்த நபரை துரத்தி வர அவன் ஒரு வண்டியில் விழுந்து விபத்தில் சிக்குகிறான்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அருண், இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு போன் செய்து,கோவிலில் துங்காவின் ஆட்கள், கார்த்திக்கின் மாமநார் தர்மலிங்கத்தை கடத்திவிட்டார். அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல, சரவணன் இப்போவே துங்காவின் போன் டவர் எங்கே இருக்கிறது என்று பார்த்து லொகேஷன் அனுப்புகிறேன் என்கிறார். இதையடுத்து, அருண்,கார்த்திக்கிற்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல கார்த்திக் அந்த இடத்திற்கு செல்கிறான்.

கார்த்திக் காப்பாற்றுவாரா: மறுபக்கம்,சக்தி வேறுவழியின்றி ஷக்தி தீபாவை ஆட்டோவில் அழைத்து வருகிறாள். இப்போ என்ன செய்வதுனே தெரியலையே கடைசி நேரத்தில் கார்த்திக் அந்த இடத்திற்கு வந்தா நல்ல இருக்கும் என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருக்க. ஷக்திக்கு துங்காவிடம் இருந்து போன் வருகிறது.எங்க இருக்கா, தீபாவை கூட்டிக்கிட்டுத்தானே வர, இந்த முறை தப்பிக்கலாம்னு எதாவது பிளான் போட்ட இங்க இந்த ஆளோட உயிர்போய்விடும் என்று சொல்லி மிரட்டுகிறான். உடனே சக்தி, அப்படி எதுவும் செய்யாதீங்க நான் தீபாக்கூடத்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனைவைக்கிறாள்.

ஒரு பக்கம் சக்தி ஆட்டோவில் வர, மறுபக்கம் அருண்,கார்த்தி,சரவணன் என அனைவரும் அந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். கடைசியாக சக்தி, அந்த இடத்திற்கு வருகிறாள். சக்தியை பார்த்த துங்கா, நீ என்கிட்ட என்னென்ன ஆட்டம் காமிச்சா, பாத்தியா கடைசில உன்னை என் இடத்திற்கே வர வெச்சேன்.யாருக்கிட்ட உன்வேலையை காட்டுனா என்ற சிரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X