இனி பேச்சு இல்ல வீச்சு தான்..துங்காவை தீர்த்துக்கட்ட பிளான் போடும் கார்த்திக்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

சென்னை: நேற்றைய எபிசோடில் தீபாவை காப்பாற்றுவதற்காக துங்காவிடம் தர்மலிங்கம் சண்டை போட்ட போது கத்தியால் குத்தப்படுகிறார். இந்த இடத்திற்கு வந்த கார்த்திக்,அருண் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். தர்மலிங்கம் மருத்துவமனையில் இருக்கும் தகவல் தெரிந்து அனைவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது அபிராமி, ஏன், கார்த்திக் நம்ம குடும்பத்திற்கு சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டு இருக்கு என்று சொல்லி அனைவரும் கதறி அழுகின்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், பலன் அளிக்காமல் தர்மலிங்கம் இறந்தவிடுகிறார். சிகிச்சை அறையில் இருந்து வெளியே வரும் டாக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடிவில்லை என்று சொல்ல மொத்த குடும்பமும் கதறி எழுகிறது. இதையடுத்து, இனியன் வந்து அனைத்து இறுதி சடங்கையும் செய்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடு, கார்த்திக்கிற்கு போன் செய்யும் துங்கா, என்ன கார்த்திக் உன் மாமனார் போய் சேர்த்துட்டாரு போல, பாவன் நல்ல மனுஷன் தன் மகளை காப்பாத்த தன் உயிரையே கொடுத்துட்டார். இப்போயாவது தெரியுதா நான் யார் என்று, ஓழுங்கா அந்த தீபாவை என்கிட்ட ஒப்படைச்சி விடு, இல்லனா அடுத்து தீபா, கீதா ரெண்டு பேரும் மேல போய்டுவாங்க என்று சொல்லிவிட்டு சிரிக்கிறான். இதையடுத்து, கார்த்திக், நீ நினைப்பது எந்த காலத்திலும் நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.

வருத்தத்தில் குடும்பம்: மறுபக்கம் தர்மலிங்கத்திற்கு இறுதி சடங்கை செய்த இனியன், அப்பாவை நினைத்து கதறி அழுதுக்கொண்டு இருக்க மைதிலி அழாத என்ற இனியனை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கா. அந்த இடத்திற்கு கார்த்திக், அருண்,ஆனந்த் மூன்று பேரும் வர, கார்த்திக் அவர்களை தனியாக அழைத்து. துங்கா போன் செய்து, இதுதான் உங்க குடும்பத்தின் முதல் பலி இனி அடுத்தடுத்து இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி மிரட்டுகிறான் என்று சொல்ல. கடுப்பான அருண், அவன் மனுஷனா மிருகமான, ஒருத்தரை கொலை செய்துவிட்டு கொஞ்சம் கூட பயமே இல்லாம மறுபடியும் கொலை பண்ணு எப்படி சொல்றனு தெரியலே என்று சொல்கிறான்.

பிளான் போடும் கார்த்திக்: இதையடுத்து, ஆனந்த், நான் வேண்டுமானால் துங்காவிடம் பேசட்டுமான என்று கேட்க, வேண்டாம் ஆனந்த், இனி அவன் கிட்ட பேச்சுகிடையாது, வீச்சுத்தான். அவன் அடுத்த பிளான் போடுவதற்குள் நம சரியான பிளான் போட்டு அவனை தூக்க வேண்டும், அப்போத்தான் நம்ம குடும்பம் நிம்மதியா இருக்கும்,அப்போ தான் தீபாவையும் காப்பாத்த முடியும் என்று சொல்லி மூன்று பேரும் சேர்ந்து பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X