கார்த்தியின் காரில் போதை பொருள்.. கைது செய்த போலீஸ்.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக், கீதா ஆகியோர் காரில் வந்து கொண்டிருக்கும் போது முருகன் வேடத்தில், எப்போதும் பார்க்கும் சிறுவனை வழியில் பார்க்கின்றனர். அவன், தீபாவை ஒரு முறை ஆசிரமத்தில் பார்த்ததாக சொல்ல அனைவரும் கிளம்பி ஆசிரம் செல்கின்றனர்.

மறுபக்கம் ரூபஸ்ரீ ஐஸ்வர்யாவை சந்திக்க ஸ்டேஷனுக்கு வந்திருக்க அப்போது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து வருகின்றனர், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை மேஜை மீது வைக்கப்பட்டு இருக்கிறது. ஐஸ்வர்யா அதில் இருந்து இரண்டு பாக்கெட்டை ரூபஸ்ரீ மூலமாக எடுத்து அதை கார்த்திக் காரில் வைக்க சொல்கிறாள். கார்த்திக், கீதா ஆகியோர் ஆசிரமத்துக்குள் சென்று இருக்கும் நேரத்தில் ரூபஸ்ரீ போதை பொருட்களை காரில் வைத்து விட்டு போலீசுக்கும் தகவல் கொடுத்து விடுகிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், ஆசிரமத்திற்கு சென்ற கார்த்திக், தீபா குறித்து விசாரிக்க, அங்கு இருப்பவர்கள் இப்போது தான் கச்சேரி நடக்கும் இடத்திற்கு சென்றதாக சொல்கின்றனர். இதையடுத்து, கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்ல கார்த்திக் வரும் போது, கார்த்திக் காரை சுற்றி வளைத்து போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்கின்றனர். அப்போது, காரில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றி இது எப்படி வந்தது என்று கேட்கின்றனர். மேலும், கார்த்தியை விசாரணைக்கு அழைக்கின்றனர். கார்த்திக் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லியும் கேட்க மறுக்கின்றனர்.

தப்பிக்கும் ஐஸ்வர்யா: மறுபக்கம் ஐஸ்வர்யாவை வேறொரு செல்லுக்கு மாற்ற முடிவெடுக்கும் போலீஸ் அவளை வண்டியில் ஏற்றி செல்கின்றனர். போலிஸிடம் இருந்து தப்பிக்க திட்டமிடும் ஐஸ்வர்யா மயங்கி விழுந்தது போல் நடிக்கிறாள். இதனால் அவளை பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்கின்றனர். சந்தர்ப்பம் பார்த்து போலீசின் துப்பாக்கியை திருடும் ஐஸ்வர்யா அதை வைத்து போலீசின் பிடியில் இருந்து தப்பிக்கிறாள்.

இன்னொரு பக்கம் ஆசிரமத்தில் இருப்பவர்கள் வேனில் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X